நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து சாதனை வெற்றியை பதிவுசெய்தது

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணி 210 ஓட்டங்களால் வெற்றிபெற்று சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.
இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.
இத் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று பேர்மிங்ஹாமில் இடம்பெற்றது.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணித்தலைவர் பிரண்டன் மெக்குலம் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ரோய் ஓட்டமெதனையும் பெறாதநிலையிலும் ஹேல்ஸ் 20 ஓட்டங்களுடனும் ஏமாற்றினர்.
பின் இணைந்த ஜோ ரூட் மற்றும் அணித்தலைவர் மோர்கன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மோர்கன் அரைச்சதம் கடந்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் சதம் (104) அடித்து வெளியேறினார்.
பின்னர் அதிரடியாக ஆடிய பட்லரும் சதம் (129) கடந்தார். ரஷித் தனது பங்கிற்கு அரைசதம் (69) எடுத்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர் கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 408 ஓட்டங்களை குவித்தது.
இதைத் தொடர்ந்து 409 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மெக்குலம் 10 ஓட்டங்களுடனும் குப்டில் 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து மோசமான தொடக்கம் கொடுத்தனர்.
சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் (45) அரைசதம் பெறும் வாய்ப்பை நழுவ விட்டார். ரொஸ் டெய்லர் (57) அரைதம் பெற்றார். எலியாட் 24 ஓட்டங்களுடன் ஏமாற்றினார்.
இதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் வந்த வேகத்திலேயே திரும்ப நியூசிலாந்து அணி 31.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 210 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாதனை வெற்றியை பதிவு செய்தது.
இங்கிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் மிரட்டியி ஸ்டீவன் பின் மற்றும் ரஷித் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் அரங்கில் இங்கிலாந்து அணி தனது சிறந்த வெற்றியை பதிவு செய்து புதிய சாதனை படைத்ததுடன் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து சாதனை வெற்றியை பதிவுசெய்தது
Reviewed by Author
on
June 10, 2015
Rating:

No comments:
Post a Comment