மைலோ பாடசாலைகள் வர்ண விருது விழாவில் 459 மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்
கல்வி அமைச்சும் இலங்கை பாடசாலைகள் விளையாட்டுத்துறை பேரவையும் இணைந்து நெஸ்ட்லே லங்கா லிமிட்டட்டின் அனுசரணையுடன் நடத்தும் 23ஆவது மைலோ பாடசாலைகள் விளையாட்டுத்துறை வர்ண விருது விழா கொழும்பு தாமரை தடாக மண்டபத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.
31 வகையான விளையாட்டுகளில் சர்வதேச மட்டத்திலும் அதிகபட்சமாக தேசிய மட்டத்திலும் கடந்த வருடம் சாதித்த 459 பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு மைலோ பாடசாலைகள் வர்ண விருதுகள் வழங்கப்படவுள்ளன.
கல்வி அமைச்சினதும் இலங்கை பாடசாலைகள் விளையாட்டுத்துறை பேரவையினதும் வர்ண விருதுகளுக்கான விதிகளின்படி எவரது பெயரேனும் விடுபட்டிருந்தால் அவர்கள் தொடர்பான சரியான ஆதாரங்களுடன் ஜூன் 15ஆம் திகதிக்கு முன்னர் சங்கங்களின் ஊடாக விண்ணப்பிக்குமாறு பாடசாலை அதிபர்கள் கோரப்பட்டுள்ளனர். இது குறித்து மாகாண கல்விப் பணிப்பாளர்களும் கவனம் செலுத்தவேண்டும் என கோரப்பட்டுள்ளனர்.
பாடசாலைகளுக்கான 31 விளையாட்டுத்துறை சங்கங்கள் பரிந்துரைத்துள்ள பட்டியல்களில் வட பகுதியிலிருந்து வர்ண விருதுக்கு இம்முறை எவரும் பரிந்துரைக்கப்படவில்லை என இலங்கை பாடசாலைகள் விளையாட்டுத்துறை பேரவையின் செயலாளர் உபாலி அமரதுங்க தெரிவித்தார்.
சர்வதேச விளையாட்டுப் போட்டிக ளில் கலந்துகொண்ட அல்லது 20இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் பங்குபற்றிய போட்டிகளில் சாதித்த 17 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள் வர்ண விருதுகளைப் பெறத் தகுதி உடையவர்கள் என இலங்கை பாடசாலைகள் விளையாட்டுத்துறைப் பேரவைத் தலை வர் பி. ஏ. அபேரட்ன தெரிவித்தார்.
மைலோ பாடசாலைகள் வர்ண விருது விழாவில் 459 மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்
Reviewed by Author
on
June 10, 2015
Rating:

No comments:
Post a Comment