அண்மைய செய்திகள்

recent
-

மீனவர்கள் மட்டு.வாவியின் நடுவே மேடை அமைப்பதை தடுக்க நடவடிக்கை : மட்டு. அரச அதிபர்


மட்டக்களப்பு வாவியின் நடுவில் மீனவர்கள் மேடைகள் அமைப்பதை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில்  அரசாங்க அதிபர்  மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு வாவியில் மீனவர்கள் மேடைகள் அமைத்து மீன்களைப் பிடிப்பதனால் வாவியின் அழகு கெடுவதோடு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வீழ்ச்சி கண்டுவருகின்றன.

இதேவேளைஇ மட்டக்களப்பை நோக்கி அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில் மீனவர்களின் இத்தகைய செயற்பாடுகள் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன.

மேடைகளை அமைப்பதற்காக மண்மூடைகள் மற்றும் டயர்கள் என்பவற்றை பயன்படுத்துவதால் வாவியின் அழகு கெடுவதோடு சூழல் மாசடையும் நிலையும் உருவாகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் மட்டு.வாவியின் நடுவே மேடை அமைப்பதை தடுக்க நடவடிக்கை : மட்டு. அரச அதிபர் Reviewed by Author on June 13, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.