மூன்று மாதத்திற்கு எரிபொருள் விலையில் மாற்றமில்லை
எதிர்வரும் மூன்று மாதத்திற்கு எரிபொருள் விலையை அதிகரிக்கப் போவதில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.
லங்கா ஐ.ஓ.சீ மற்றும் கனிய எண்ணெய் கூட்டுத்தானம் ஆகியன எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் சுரேன் படகொட குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கோரிக்கைகள் குறித்து விலை சூத்திரம் தயாரிக்கபட வேண்டும் எனவும் அதனுடன் பொதுமக்களின் தேவை குறித்தும் ஆராயப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எரிபொருள் விநியோகத்தில் கனிய எண்ணெய் கூட்டுதாபனத்திற்கு 04 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாது எனவும் அமைச்சின் செயலாளர் சுரேன் படகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்று மாதத்திற்கு எரிபொருள் விலையில் மாற்றமில்லை
Reviewed by NEWMANNAR
on
June 14, 2015
Rating:

No comments:
Post a Comment