உலகளவில் வாழ்வதற்கு சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியீடு: பின்னுக்கு தள்ளப்பட்ட புகழ்பெற்ற நகரங்கள்

சர்வதேச அளவில் அடிப்படை தேவைகள் முதற்கொண்டு அனைத்து வசதிகளுடன் மனிதர்கள் வாழ தகுதியான சிறந்த நகரங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
Monocle என்ற பிரபலமான வாரப்பத்திரிகை கடந்த 2007ம் ஆண்டு முதல் உலகளவில் வாழ தகுதியான சிறந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
2015ம் ஆண்டிற்குரிய சிறந்த நகரங்களின் பட்டியலை நேற்று வெளியிடப்பட்டது. உணவு, தண்ணீர், ஆரோக்கியம், பொழுதுபோக்கு அம்சங்கள், சுற்றுச்சூழல் உள்ளிட்ட மிக முக்கிய அம்சங்களின் அடிப்படையில் நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
உலகளவில் சிறந்த நகரங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள 25 நகரங்களின் பட்டியல்:
1.டோக்கியோ, ஜப்பான்.
2.வியன்னா, ஆஸ்திரியா.
3.பெர்லின், ஜேர்மனி.
4.மெல்போர்ன், அவுஸ்ரேலியா.
5.சிட்னி, அவுஸ்ரேலியா.
6.ஸ்டோக்ஹோம், சுவீடன்.
7.வான்கூவர், கனடா.
8.ஹெல்சின்கி, ஃபின்லாந்து.
9.முனிச், ஜேர்மனி.
10.சூரிச், சுவிட்சர்லாந்து.
10.கோபின்ஹேகென், டென்மார்க்.
12.ஃபுகுகா, ஜப்பான்.
13.சிங்கப்பூர்.
14.கியோடோ, ஜப்பான்.
15.பாரீஸ், பிரான்ஸ்.
16.மாட்ரிட், ஸ்பெயின்.
17.ஆக்லாந்து, நியூசிலாந்து.
18.லிஸ்போன், ஸ்பெயின்.
19.ஹோங் கோங், சீனா.
20.ஆம்ஸ்டெர்டம், நெதர்லாந்து.
21.ஹேம்பர்க், ஜேர்மனி.
22.ஜேனிவா, சுவிட்சர்லாந்து.
23.ஓஸ்லோ, நோர்வே.
24.பார்சிலோனா, ஸ்பெயின்.
25. போர்ட்லாந்து, அமெரிக்கா.
இந்த பட்டியலில் சூரிச் மற்றும் கோபின்ஹேகென் ஆகிய இரண்டு நகரங்கள் 10-வது இடத்தை பிடித்துள்ளன.
ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ முதல் இடத்தை பிடித்தது மட்டுமல்லாமல், டோக்கியோ உள்பட 3 நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்று இருப்பது ஜப்பான் நாட்டிற்கு கிடைத்துள்ள பெருமையாகும்.
ஜப்பானை தொடர்ந்து, ஸ்பெயின் நாட்டின் 3 நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
உலக வல்லரசு நாடான அமெரிக்காவிற்கு கடைசி இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க், ரஷ்யாவின் மோஸ்கோ, பிரித்தானியாவின் லண்டன் உள்ளிட்ட மிக முக்கிய, பிரபலம் வாய்ந்த நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் வாழ்வதற்கு சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியீடு: பின்னுக்கு தள்ளப்பட்ட புகழ்பெற்ற நகரங்கள்
Reviewed by Author
on
June 13, 2015
Rating:

No comments:
Post a Comment