அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு மன்னாரில் விழிர்ப்புணர்வு ஊர்வலம்.-Photos


சர்வதேச போதை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு மன்னார் வலயக்கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வுப் பேரணி ஒன்று இன்று காலை மன்னாரில்இடம்பெற்றது.

மன்னார் வலயக்கல்வி திணைக்களத்திற்குற்பட்ட இரண்டு கோட்டக்கல்வி பணிமனை பிரிவுகளில் பாடசாலை மாணவர்ளினால் போதை ஒழிப்பு தினத்தையொட்டி விழிர்ப்புணர்வு ஊர்வலம் இடம் பெற்றது.

மன்னார் நகர் மற்றும் பேசாலை ஆகிய இரு இடங்களிலும் குறித்த விழிர்ப்புணர்வு ஊர்வலம் இடம் பெற்றது.

மன்னார் நகரில் 5 பாடசாலை மாணவர்கள் ஒன்றினைந்து குறித்த விழிர்ப்புணர்வு ஊர்வலத்தை மேற்கொண்டனர்.

மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு மன்னார் வைத்தியசாலை வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தனர்.
பின் அங்கிருந்து ஊர்வலம் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது.

இதன் போது சுமார் ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் பாவனைக்கு எதிராக சுலோகங்களை ஏந்தியவாறு குறித்த சர்வதேச போதை ஒழிப்பு தின ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தனர்.







சர்வதேச போதை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு மன்னாரில் விழிர்ப்புணர்வு ஊர்வலம்.-Photos Reviewed by NEWMANNAR on June 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.