அண்மைய செய்திகள்

recent
-

மணல் வியாபாரத்தில் டக்லஸ் தேவானந்தாவும் மகேஸ்வரி நிதியமும் பாரிய ஊழல்?


மணல் வியாபாரத்தில் டக்லஸ் தேவானந்தாவும் மகேஸ்வரி நிதியமும் பாரிய ஊழலில் ஈடுபட்டிருப்பதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட லொரி உரிமையாளர்கள் சங்கம் ஊழல் ஒழிப்புக் குழுவில் இன்று முறைப்பாடொன்றை பதிவு செய்தது.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டார்.

யாழ். மாவட்ட லொரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பிரசன்னமாகியிருந்தார்.

அவர் தெரிவித்ததாவது;

முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, 2010 இல் இருந்து இந்த சங்கத்தில் தொழில் செய்தவர்களுக்கு ஒவ்வொரு வாகனத்திற்கும் 5000 ரூபாய் அறவிட்டு அதற்கு மேலாக ஒவ்வொரு பயணத்திற்கும் 300 ரூபாப் படி அறவிட்டிருக்கின்றார். அந்தப் பணம் ஏறத்தாழ 2 கோடி ரூபாவாக இருக்கின்றது. அதைத் திரும்பக் கொடுக்குமாறு அவர்கள் வற்புறுத்திய போது தருவேன் என்று கூறி, ஐந்தாறு மாதமாக ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் என்ற முறைப்பாட்டை இன்றைக்கு ஊழல் ஒழிப்புக் குழு செயலகத்தில், சங்கத்தினுடைய உத்தியோகத்தர்கள் பாரப்படுத்தியிருக்கின்றனர்.


என்றார்.
மணல் வியாபாரத்தில் டக்லஸ் தேவானந்தாவும் மகேஸ்வரி நிதியமும் பாரிய ஊழல்? Reviewed by NEWMANNAR on June 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.