இறுக்கமாக ஜீன்ஸ் அணிந்ததால் வந்த வினை: கால்கள் செயலிழந்த பரிதாபம்

அவுஸ்திரேலியாவில் இளம் பெண் ஒருவர் இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிவதை வழக்கமாக கொண்டிருந்ததால் அவரது கால்கள் செயலிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடிலெயிட் நகரைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் மிகவும் இறுக்கமாக ஜீன்ஸ் அணிவதை வழக்கமாகக் கொண்டவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தொடர்ச்சியாக இவ்வாறு இறுக்கமாக ஜீன்ஸ் அணிந்ததால் அவரின் முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதிகள் பெரிதாக வீங்கி, நரம்புகள் அனைத்தும் சுருங்கி, கடுமையான அவஸ்தைக்கு உள்ளானார்.
மேலும் அவர் எழுந்து நடமாட முடியாத நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்திருந்த அந்தப் பெண், தனது வாகனத்தில் இருந்து இறங்கியுள்ளார்.
அப்போது அவருடைய அடிக்கால் பகுதி பெரியதாக வீங்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அவர் அணிந்திருந்த ஜீன்ஸை கழற்ற முடியாமல் தவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை, மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய தசைப்பகுதி பாதிக்கப்பட்டு விட்டதாகவும், காலின் கீழ்ப் பகுதியில் நரம்புகள் ஒன்றாக இணைந்துவிட்டதாகவும் கூறி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
4 நாட்களாக மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சை பெற்றுவந்த அவர் தற்போது குணமடைந்துவருவதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்த நரம்பியல் வல்லுநர் கிம்பர் கூறியதாவது, பெண்கள் நீண்ட நேரம் இறுக்கமான ஜீன்ஸ்களை அணிவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் நீண்ட நேரமாக இவ்வாறு ஜீன்ஸ் அணிவது என்பது உடல் நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இறுக்கமாக ஜீன்ஸ் அணிந்ததால் வந்த வினை: கால்கள் செயலிழந்த பரிதாபம்
Reviewed by Author
on
June 25, 2015
Rating:

No comments:
Post a Comment