மடு – பெரிய பண்டிவிரிச்சான் பிரதான வீதியில் டிப்பர் வாகனத்தில் மோதி கரடி பலி.
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை(25) பாரிய கரடி ஒன்று வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளது.
மடு பண்டிவிரிச்சான் பிராதான வீதியில் சென்று கொண்டிருந்த டிப்பர் ரக வாகனத்தில் மோதியே குறித்த கரடி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனத்தில் மோதி உயிரிழந்த நிலையில் காணப்பட்ட குறித்த கரடியின் உடலை மடு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் மீட்டு மடு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து விசாரனைகளின் பின் மடு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் குறித்த கரடியின் உடலை கொண்டு சென்றுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-இந்த நிலையில் மடு அன்னையின் ஆவனித்திருவிழா எதிர்வரும் யூலை மாதம் 01 ஆம் திகதி இடம் பெறவுள்ள நிலையில் கடந்த 23 ஆம் திகதி மடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
-இந்த நிலையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் மடு தேவாலயத்தில் தங்கியுள்ள நிலையில் மனிதர்களை தீண்டுகின்ற கரடி போன்ற காட்டு மிருகங்களினால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
June 25, 2015
Rating:

No comments:
Post a Comment