தமிழக மீனவர்கள் 14 பேரையும் மீண்டும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
தலை மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 தமிழக மீனவர்களையும் மீண்டும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று வெள்ளிக்கிழமை(3)உத்தரவிட்டார்.
தமிழக மீனவர்கள் 14 பேர் தலைமன்னார் கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடந்த 02 ஆம் திகதி (02-06-2015) மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 14 தமிழக மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் குறித்த 14 தமிழக மீனவர்களும் மீண்டும் இன்று(3) வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது குறித்த மீனவர்களை மீண்டும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை (17-07-2015) விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
தமிழக மீனவர்கள் 14 பேரையும் மீண்டும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
Reviewed by NEWMANNAR
on
July 03, 2015
Rating:
No comments:
Post a Comment