அண்மைய செய்திகள்

recent
-

"நாட்டில் ஏற்படப்போகும் ஆட்சி மாற்றம் எமக்கு உதவப்போகின்றது முஸ்லிம்களும் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்"


நாட்டில் எதிர்­வரும் ஆகஸ்ட் 17 ஆம் திக­திக்குப் பின்னர் ஏற்­ப­டப்­போகும் ஆட்சி மாற்­ற­மா­னது எமக்கு உத­வு­வ­தா­கவே அமை­யப்­போ­கி­றது என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

முஸ்லிம் மக்­க­ளு­டைய எதிர்­காலம் மத்­திய அர­சாங்­கத்தில் தங்­க­வில்லை. பிராந்­திய அரசின் அதி­கா­ரங்­களைப் பெறு­வ­தி­லேயே தங்­கி­யுள்­ளது. ஆகவே தேசியக் கட்­சி­க­ளுடன் கைகோர்க்­காமல் எம்­முடன் இணை­யுங்கள் என்றும் இரா.சம்­பந்தன் அழைப்பு விடுத்தார்.

தமிழ்­தே­சியக் கூட்­ட­மைப்பின் திரு­கோ­ண­மலை மாவட்ட வேட்­பாளர் அறி­முகம் திரு­மலை சில்­வஸ்டார் ஹோட்­டலில் கிளைத் தலைவர் கோ.சத்­தி­ய­சீ­ல­ராஜா தலை­மையில் நடை­பெற்ற போது அதில் கலந்து உரை­யாற்­றிய போதே அவர் மேற் கண்­ட­வாறு கூறினார்.

இரா.சம்­பந்தன் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் போக்­கிலும் மன­நி­லை­யிலும் ஒரு­மாற்றம் தெரி­கி­றது.தான்­விட்ட தவ­று­களை அனு­ரா­த­புர கூட்­டத்தில் பகி­ரங்­க­மா­கவே ஒத்துக் கொண்­டுள்ளார். ஏற்றுக்கொண்டுள்ள மஹிந்த தான் சர்­வ­தே­சத்­துடன் ஒத்­துப்­போ­க­வில்லை. அவர்­களை உதா­சீனம் செய்து சர்­வ­தேச எதிர்ப்பை சம்­பா­தித்­து­விட்டேன் என்று ஏற்­றுக்­கொண்­டுள்ளார்.

அடுத்­த­தாக சிறு­பான்மைச் சமூ­கத்தின் போக்­கையும் அபி­லா­ஷை­க­ளையும் புரிந்து கொண்டு சம­மாக நடக்கத் தவ­றி­விட்டேன் என்­ப­தையும் ஏற்­றுக்­கொண்­டுள்ளார். புலி­களை விமர்­சித்­தி­ருந்­தாலும் இவ்­வாறு அவர் கூறி­யுள்ளார் என்­பதை தெரிந்­து­கொண்­டுள்ளோம். ஆனால் தேர்­தலின் பின் என்ன நடை­பெறும் என்­பதை நாம் இப்­பொ­ழுது கூறி­விட முடி­யாது.

முஸ்லிம் மக்­க­ளுக்கு நான் பகி­ரங்­க­மாக ஒன்றைக் கூறிக்­கொள்­கிறேன். மத்­திய அர­சாங்­கத்தை நீங்கள் ஆத­ரிப்­ப­த­னாலோ தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்து கேட்­ப­த­னாலோ எதிர்­கா­லத்­திலும் சரி நிகழ்­கா­லத்­திலும் சரி எவ்­வித பய­னையும் பெறப்­போ­வ­தில்லை. 60 வரு­டங்­க­ளாக நாம் எமது உரி­மை­க­ளுக்­கா­கவும் தீர்­வுக்­கா­கவும் போராடி வந்­துள்ளோம். எந்தத் தீர்­விற்­காக நாம் போராடி வந்­தோமோ? அந்­தத்­தீர்வை விரைவில் அடைந்தே தீருவோம். அதை யாரும் தடுக்க முடி­யாது.

திரு­கோ­ண­மலை மாவட்ட முஸ்லிம் மக்கள் அதிக குழப்பம் அடைந்து காணப்­ப­டு­கின்­றார்கள் என்­பது எமக்குப் புரி­கின்­றது. இக்­கு­ழப்­பத்­திற்­கான காரணம் என்­ன­வென்றால்இ தங்கள் தலை­வர்கள் தங்கள் உரி­மை­பற்றிஇ அதி­காரம் பற்றி எவ்­விதம் செயற்­ப­டு­கின்­றார்கள் என்­பது முஸ்லிம் மக்­க­ளுக்குத் தெரி­யாமல் உள்­ளது. இது தான் குழப்­பத்­திற்­கான காரணம். முஸ்லிம் காங்­கிரஸ், மறைந்த தலைவர் அஷ்ரப் இனால் ஆரம்­பிக்­கப்­பட்ட கட்சி. முஸ்லிம் மக்­களைப் பிர­தி­நி­தித்­துவப் படுத்தும் கட்சி என வர்­ணிக்­கப்­படும் கட்சி. அஷ்­ரப்பின் தலை­மையை மக்கள் ஏற்­றுக்­கொண்­ட­வர்கள் .

அவரின் மறை­விற்­குப்பின் நிலைமை மாறி­யுள்­ளது. கிழக்கு மாகா­ணத்தில் முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் நாம் சேர்ந்து ஆட்­சி­ய­மைத்­த­மைக்கு முக்­கிய காரணம் தமிழ்இமுஸ்லிம் ஒற்­றுமை கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வேண்டும் காப்­பாற்­றப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­கா­க­வே­யாகும்.

இரண்டு இனங்­க­ளி­னதும் உற­வு­களும் தொட­ர­வேண்டும். அந்த உறவு பெறு­மதி மிக்­கது. வட­கி­ழக்கைப் பொறுத்­த­வரை தமிழ்இ முஸ்லிம் ஒற்­றுமை பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். அது வளர்ச்­சி­ய­டைந்து பலம் அடை­ய­வேண்டும் என்­ப­தாகும்.

தற்­பொ­ழுது பாரா­ளு­மன்றத் தேர்தல் ஒன்று வந்­தி­ருக்­கின்­றது. இத்­தேர்­தலில் பெரும்­பான்­மைக்­கட்­சி­க­ளுடன் முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்­ப­டக்­கூ­டாது. நாம் பெரும்­பான்மைக் கட்­சி­க­ளுடன் போரா­டு­கின்றோம். ஆட்சி அதி­காரம் எமக்கு வழங்­கப்­பட வேண்டும்இ சுயாட்சி வேண்டும் என்று கேட்­கின்றோம். எமது பிராந்­தி­யங்­களில் ஆட்சி எம்­மிடம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வேண்டும் என்று ஜன­நா­யக ரீதியில் போராடி வரு­கின்றோம். அந்­தத்­தீர்வு விரைவில் வரப்­போ­கின்­றது. இதை நான் பகி­ரங்­க­மாக கூற­வி­ரும்­பு­கின்றேன். இவ்­வி­த­மான சூழ்­நி­லையில் எதற்­காக ? ஏன்? முஸ்லிம் காங்­கிரஸ் ஐ.தே.கட்­சி­யுடன் சேர்ந்து போட்­டி­யி­ட­வேண்டும்?

ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரக்­கூட்­ட­மைப்பின் முக்­கிய வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளார். முஸ்லிம் மக்கள் அவ­ருக்கு வாக்­க­ளிக்க விரும்­ப­வில்லை. காரணம் அவரின் ஆட்­சிக்­கால கொடு­மைகள். முஸ்லிம் மக்­களின் பள்­ளி­வா­சல்கள் இடிக்­கப்­பட்­ட­போதுஇ அவர்­க­ளுக்கு கொடு­மைகள் இழைக்­கப்­பட்­ட­போது இந்த நாட்டில் சட்டம் ஒழுங்­குக்­குப்­பொ­றுப்­பா­ன­வர்கள் ஓடி ஒளிந்­து­விட்­டார்கள்.

அந்த மக்­களைப் பாது­காக்கத் தவறி விட்­டார்கள். தம்­புள்­ளையில் நடந்த சம்­பவம்,கொழும்பில், பேரு­வ­ளையில், அளுத்­கம ஆகிய இடங்­களில் நடந்த சம்­ப­வங்கள், கொடு­மைகள் போன்­ற­வற்றை அனு­ப­வித்­ததன் கார­ண­மா­கவே முஸ்லிம் மக்கள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு இன்று வாக்­க­ளிக்­க­வி­ரும்­ப­வில்லை. விரும்­பவும் கூடாது. நாம் என்ன செய்ய வேண்­டு­மென்று அம்­மக்கள் சிந்­திக்­கின்­றார்கள். எங்­க­ளுக்கு வாக்­க­ளி­யுங்கள், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வாக்­க­ளி­யுங்கள், எனக்கு வாக்­க­ளி­யுங்கள். உங்­களை நாம் ஒரு போதும் கைவிட மாட்டோம்.

முஸ்லிம் மக்கள் சார்­பாக ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் குரல் கொடுத்­தி­ருக்­கிறோம். முஸ்லிம் மக்கள் மீது பல­வி­த­மான தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்ட போது நான் பாரா­ளு­மன்றில் இவ்­வி­டயம் சம்பந்­த­மாக விசே­ட­மான உரையை ஆற்­றினேன். அப்­பொ­ழுது உங்கள் இனத்தைச் சேர்ந்த அஸ்­வரும் அப்துல் காதரும் எனக்கு குறுக்­கீடு செய்­தார்கள்.
அவர்கள் செய்த குறுக்­கீட்டைக் கேட்ட பல முஸ்லிம் மக்கள் என்­னுடன் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு அவர்கள் செய்த காரி­யத்­துக்­காக மன்­னிப்புக் கேட்­ட­துடன் எனக்கு பாராட்டும் நல்­கி­னார்கள்.

அம்­மையார் நவ­நீ­தம்­பிள்ளை இலங்கை வந்­த­போது தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சினை பற்றி கூறி­விட்டு, முஸ்லிம் மக்கள் படும் கஷ்­டங்கள் பற்றி எடுத்துக் கூறி­ய­போது அவர் ஒரு விட­யத்தைக் கூறினார் அதா­வது முஸ்லிம் மக்கள் பற்றி பேசு­வ­தற்கும் நீங்கள் இருக்­கி­றீர்கள் என்று கூறினார்.என­வேதான் முஸ்லிம் மக்­க­ளுக்கு ஒரு விசேட செய்­தியை விடுக்க விரும்­பு­கின்றேன். மத்­திய அர­சாங்­கத்தால் எந்த நன்­மையும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. உங்கள் எதிர்­காலம் பிராந்­திய அதி­கா­ரத்தின் மூலமே தங்­கி­யுள்­ளது என்­பதை நீங்கள் உணர்ந்து செயற்­படல் வேண்டும். மைத்­தி­ரியின் ஆட்சி பல­முள்­ள­தாக அமை­யாத கார­ணத்­தினால் எல்லா விட­யங்­க­ளையும் உட­ன­டி­யாக நிறை­வேற்ற முடி­யாமல் போய்­விட்­டது.

ஆனால் தேர்தல் முடிந்த பிறகு எல்­லா­வி­ட­யங்­களும் ஒரு முடி­வுக்கு வரு­மென நாம் நம்­பு­கின்றோம். இருந்த போதிலும் எமது நிலைப்­பாட்டை இந்த தேர்தல் மூலம் தெளி­வு­ப­டுத்த வேண்­டி­யது அவ­சியம். தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெளி­வாக அதை எடுத்துக் கூறுவோம்.

எமது மக்­க­ளு­டைய ஜன­நா­யக முடிவு என்ன- ? எமக்கு வேண்­டிய அர­சியல் தீர்வு என்ன? என்­பது பற்­றிய தெளி­வான முடிவை விஞ்­ஞா­ப­னத்தில் கூறுவோம். அது மாத்­தி­ர­மல்ல மக்­களின் உட­ன­டித்­தே­வைகள் சம்பமந்­த­மா­கவும் அது நிறை­வேற்ற வேண்­டிய அவ­சியம், அவ­சரம் குறித்தும் கூறுவோம்.

தமிழ் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு நிரந்­த­ர­மான தீர்வு காணப்­பட வேண்டும். நிரந்­தர தீர்­வொன்றைக் காண்­ப­த­னூ­டா­கத்தான் நாட்டின் நல்லிணக்கம், சமாதானம், புரிந்துணர்வு, சமத்துவம், ஒற்றுமை, ஒருமித்த நாடு என்ற கருமங்களை அடையமுடியுமென்ற நிலை ஏற்படும். தேர்தல் முடிவுகளுக்குப் பின் வல்லரசான இந்தியாவும் அமெரிக்காவும் எமது பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஏற்பட வேண்டுமென்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றன.

எமக்கு சார்பாக இருக்கின்றார்கள். அவர்கள் எங்களை கைவிட முடியாது. நாட்டில் ஏற்படப் போகும் ஆட்சிமாற்றமானது எமக்கு உதவப் போகின்றது என்பது உண்மை.
இக் கூட்டத்தில் வேட்பாளர்களான க. துரைரெட்ண சிங்கம், டாக்டர் இந்திராணி, சரா புவனேஸ்வரன், க.கனகசிங்கம், க.ஜீவ ரூபன், அ.யதீந்திரா மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி ஆகி யோரும் உரையாற்றினர்.

"நாட்டில் ஏற்படப்போகும் ஆட்சி மாற்றம் எமக்கு உதவப்போகின்றது முஸ்லிம்களும் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்" Reviewed by Author on July 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.