அண்மைய செய்திகள்

recent
-

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி தற்கொலை


தற்கொலை முயற்சி செய்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 4 தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 3 வருடத்தில் கல்வி கற்ற மாணவி லோறன்ஸ் அனா எப்சியா (வயது-24) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இம்மாணவி அதே பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட ஆசிரியர் ஒருவருடன் காதல் தொடர்பு கொண்டிருந்ததாகவும் அவ்வாசிரியருக்கு இம்மாதம் திருமணம் வேறு ஒருவருடன் நிச்சயிக்கப்பட்டிருந்ததை அறிந்து அடிக்கடி கருத்து முரண்பாட்டை அவ்வாசிரியருடன் இம்மாணவி கொண்டிருந்ததாகவும் சக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை அறிந்த அம்மாணவி பல்கலைக்கழகத்தின் அருகில் தான் தங்கியிருந்த வீட்டில் மண்ணென்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

இம்மாணவியின் பூதவுடன் இன்று அவரது சொந்த இடமான முல்லைத்தீவு செல்வபுரத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி தற்கொலை Reviewed by NEWMANNAR on July 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.