மன்னாரில் முப்பரிமாண நூலக கண்காட்சி ஆரம்பம்.-Photos
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் நூலக விழிப்புணர்வு நிறுவகம் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் முப்பரிமான நூலகக் கண்காட்சி இன்று வியாழக்கிழமை (9) காலை 10 மணியளவில் மன்- அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையில் ஆரம்பமானது.
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் பிரம்ம சிஸ்ரீ மஹா தர்மகுமார சர்மா குருக்கள் தலைமையில் குறித்த கண்காட்சி ஆரம்பமானது.
குறித்த கண்காட்சிக்கு பிரதம விருந்தினராக மன்னார் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார்,சிறப்பு விருந்தினராக மன்னார் உதவி பிரதேசச் செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு,மற்றும் கௌரவ விருந்தினராக நூலக விழிர்ப்புனர்வு நிறுவனத்தின் தலைவி அருளானந்தம் சிறிகந்த லட்சுமி மற்றும் தமிழ்ச்சங்கத்தின் பிரதி நிதிகள்,பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
பாடசாலை மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கண்காட்சியில் ஆரம்ப பிரிவு மாணவர்கள் முதல் உயர் தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் வரை பயணடையக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இன்று 9 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் எதிர் வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை வரை குறித்த கண்காட்சி இடம் பெறவுள்ளது.
மேலும் இக் கண்காட்சிக்கு ஊடக அனுசரணை மன்னார் இணையம் வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் முப்பரிமாண நூலக கண்காட்சி ஆரம்பம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
July 09, 2015
Rating:
No comments:
Post a Comment