மன்னாரில் வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக, வாணிப அமைச்சின் உப அலுவலகம் திறந்து வைப்பு.-Photos
வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து,வர்த்தக,வாணிப அமைச்சின் உப அலுவலகம் இன்று திங்கட்கிழமை (20) காலை மன்னாரில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸ் நிலைய பிரதான வீதியில் குறித்த அலுவலகம் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டே குறித்த உப அலுவலகம் மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்ட மக்கள் அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்திக்க வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து,வர்த்தக,வாணிப அமைச்சின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள யாழ்ப்பாணத்திற்கு சென்று வந்தனர்.
இதனால் மக்களின் பண விரையம்,மற்றும் பல்வேறு அசௌகரியங்களை கருத்தில் கொண்டு அவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக குறித்த அலுவலகம் துரித கதியில் மன்னாரில் திறக்கப்பட்டாதாக அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து,வர்த்தக,வாணிப அமைச்சின் செயலாளர் ஏ.சத்தியசீலன், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வடமாகாண பணிப்பாளர் ஜே.ஜே.பெலிசியன் மற்றும் சர்வமதத் தலைவர்கள் , உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள்,திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக, வாணிப அமைச்சின் உப அலுவலகம் திறந்து வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
July 20, 2015
Rating:
No comments:
Post a Comment