அண்மைய செய்திகள்

recent
-

ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் குறித்து புதிய தகவல்


ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் கலேவெல பிரதேச சர்வதேச பாடசாலை அதிபராக இரண்டு வருட காலமாக செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


அவர் சிரியாவில் மேற்கத்தைய விமானத் தாக்குதல் ஒன்றில் கடந்த வாரம் கொல்லப்பட்டதாக சமூக இணையத்தள செய்திகள் வெளியாகியது.

ஐ.எஸ் திவிரவாத குழு அபு சுராய் சைலானி என்ற புனைப்பெயரை அவருக்கு சூட்டியிருந்தது. 37 வயதுடைய இவர் கண்டி, வெரெல்லகம பிரதேசத்தில் பிறந்தவராகும்.

அவரது மனைவி கொழும்பை சேர்ந்தவராவார் .

கலேவெல பிரதேச சர்வதேச பாடசாலையில் அதிபராக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் இவர் முஸ்லி லிலம்தன் என்ற பெரை பயன்படுத்தியுள்ளார்.

2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாடசாலை விடுமுறையின் போது பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னார் மெக்கா யாத்திரைக்கு செல்வதாக கூறி பாடசாலை அதிபர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக பாடசாலை இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.


ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் குறித்து புதிய தகவல் Reviewed by NEWMANNAR on July 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.