மறைந்துவரும் உலக அதிசயம்: இயற்கை சீற்றங்கள் மற்றும் மனிதர்களால் பாதிக்கப்படும் சீன பெருஞ்சுவர்
உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவரின் பெரும் பகுதிகள் மறைந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றாகக் கூறப்பட்டு வரும் சீனப் பெருஞ்சுவர், மிகவும் பழமை வாய்ந்ததாகும்.
ஷாங்ஹாயுன் நகரில் இருந்து ஜியாயூயுன் வரை பரந்து விரிந்துள்ள இந்த சுவரின் நீளம் 9,000 கிலோமீற்றரில் இருந்து 21,000 கிலோமீற்றர் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சுவர் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இயற்கை சீற்றங்கள், பேரழிவுகள் ஆகியவைகள் மூலம் ஒரு பக்கம் அழிந்துவந்தாலும், சுவரில் உள்ள கற்கள், இரும்புத் துண்டுகளை சிலர் திருடிச் செல்வதாலும் இந்த உலக அதிசயம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில சீன மக்கள் பெருஞ்சுவரில் உள்ள கற்களை பெய்ர்த்துக்கொண்டு சென்று தங்கள் வீடுகள் கட்டிக்கொள்ள பயன்படுத்துவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் சிலப் பகுதிகளில் சீனப் பெருஞ்சுவர் இருந்ததற்கான அடையாளம் மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் சிதிலமடைந்தவைதான் சீனப் பெருஞ்சுவருக்கான அடையாளமாக இருப்பதாகவும் ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.
மறைந்துவரும் உலக அதிசயம்: இயற்கை சீற்றங்கள் மற்றும் மனிதர்களால் பாதிக்கப்படும் சீன பெருஞ்சுவர்
Reviewed by Author
on
July 01, 2015
Rating:

No comments:
Post a Comment