மன்னார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் முப்பரிமாண நூலக கண்காட்சி
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 9,10,11,12,13 ஆகிய தினங்களில் மன்னார் அல்/அஸ்கர் மகா வித்தியாலயத்தில் நூலக விழிப்புணர்வு நிறுவகம் நடாத்தும் மாபெரும் முப்பரிமாண நூலக கண்காட்சிக்கு மக்கள் அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.
அனுமதி இலவசம். கனிஸ்ட சிரேஸ்ட மாணவர் மற்றும் புலைமைப்பரிசில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் என அனைவரது சிந்தனை துண்டலையும், நூலகத் தேடலையும் விருத்திசெய்யும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியானது மன்னார் மக்களுக்கு கிடைத்த ஓர் வரப்பிரசாதமாகவே அமையும். நிதி நிலமையில் பின்தங்கியுள்ள பாடசாலைகள் முதற்கொண்டு அனைத்துப் பாடசாலைகளும் இத்தகைய கண்காட்சியை மன்னாரிலேயே பார்வையிட்டுப் பயனடைய ஓர் அரிய வாய்பினை ஏற்படுத்தித்தந்துள்ள மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தொடர்செயற்பாடுகளுக்கு உங்கள் ஆதரவுக்கரத்தினை எதிர்பார்க்கின்றோம்.
தமிழ் மொழிக்காகவும் மன்னார் தமிழ்மக்களின் கல்வி கலாசார தேவைகளை பூர்த்தி செய்யவும் மன்னார் தமிழ்ச்சங்கம் என்றும் முன்னிக்கும்.
திரு. எஸ். ஷதீஸ் - நிதிச்செயலாளர்,
மன்னார் தமிழ்ச்சங்கம்.
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் முப்பரிமாண நூலக கண்காட்சி
Reviewed by NEWMANNAR
on
July 06, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 06, 2015
Rating:


No comments:
Post a Comment