தேசிய மட்ட கிரிடா சக்தி ஹொக்கி விளையாட்டுப்போட்டி -2015
விளையாட்டத்துறை அமைச்சின் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் தேசிய ரீதியில் கிரிடா சக்தி மாவட்ட ஹொக்கி அணிகளுக்கிடையில் 04,05,07.2015 ம் திகதி கொழும்பில் நடாத்தப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஹொக்கிப்போட்டியில் மன்னார் மாவட்ட கிரிடா சக்தி ஹொக்கி அணியினர் முதன் முறையாக வெற்றி பெற்றனர். இப்போட்டியில் தாழ்வுபாடு மன்/புனித வளனார் றோ.க.த.க.பாடசாலையை சேர்ந்த மாணவ மாணவிகளே முற்று முழுதாக பங்கு பற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடிப்படையான சில வசதிகளுடன் பயிற்சிகளை மேற்கொண்ட இவ் வீரர்கள் மன உறுதியுடன் தமது திறனை வெளிப்படுத்தி அனைவரினதும் பாராட்டுதல்களை பெற்றனர். இப் போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் பாரட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் .
பெண்களுக்கான போட்டியில்
மாத்தளை மாவட்டம் 1ம் இடம்
மன்னார் மாவட்டம் 2ம் இடம்
கம்பஹா மாவட்டம் 3ம் இடம்
ஆண்களுக்கான போட்டியில்
மாத்தளை மாவட்டம் 1ம் இடம்
கம்பஹா மாவட்டம் 2ம் இடம்
மன்னார் மாவட்டம் 3ம் இடம்
இவர்களை பயற்றுவித்த பயிற்றுனர்களான திரு ஆரோக்கியராஜ் மியேஸ் , செல்வி ஆன் பைரவி மற்றும் கல்லூரி அதிபர் திரு ஸ்ரான்லி டிமெல் லெம்பேட் அத்துடன் பாடசாலை சமுகத்திற்கும் மனமார்ந்த பாரட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்துடன் விளையாட்டுத்துறைக்கு சகல ஒத்துழைப்புகளையும் வழங்கும் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மன்னார் மாவட்ட விளையாட்டுத்துறை இணைப்பு அதிகாரி,
விளையாட்டுப்பிரிவு ,மாவட்ட செயலகம் ,மன்னார்.
தேசிய மட்ட கிரிடா சக்தி ஹொக்கி விளையாட்டுப்போட்டி -2015
Reviewed by NEWMANNAR
on
July 07, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 07, 2015
Rating:


No comments:
Post a Comment