மன்னார் இரணை இலுப்பைக் குளத்தில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
மன்னார், மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் கிராமத்தில் நீரோடை ஒன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
இரணை இலுப்பைக்குளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்ற சின்னரெட்டியர் சிவபாதம் (வயது 49) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் எவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது தொடர்பான விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் இரணை இலுப்பைக் குளத்தில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
Reviewed by NEWMANNAR
on
July 10, 2015
Rating:

No comments:
Post a Comment