தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பம்
பொதுத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (03) ஆரம்பிக்கப்படவுள்ளன.
தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிடுகின்றார்.
2014 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு, தகுதியான அரசாங்க ஊழியர்கள் தபால்மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிக்கின்றார்.
தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
July 03, 2015
Rating:

No comments:
Post a Comment