பதிவுத் தபால்களை விநியோகிப்பதற்கு விசேட திட்டம் முன்னெடுப்பு
கொழும்பு மத்திய தபால் பரிமாற்றத்தில் பதிவுத் தபால்கள் தேங்கிக் கிடப்பதை தவிர்ப்பதற்காக விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கடிதங்களை வகைப்படுத்துவதற்காக மேலதிக உத்தியோகத்தர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன குறிப்பிடுகின்றார்.
மத்திய தபால் பரிமாற்றத்தில் நாளாந்தம் சுமார் ஒரு இலட்சம் பதிவுத் தபால்கள் சேர்வதாகவும் தபால் மாஅதிபர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக கொழும்பிலுள்ள தபால் அலுவலகங்களில் சேர்கின்ற பதிவுத் தபால்களை மத்திய தபால் பரிமாற்றத்திற்கு அனுப்பாது, அந்தந்த தபால் அலுவலகங்களுக்கே நேரடியாக அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன கூறினார்.
குறிப்பாக பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்தல், பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக விண்ணப்பித்தல் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பப்படுகின்ற கடிதங்கள் காரணமாகவே கொழும்பு மத்திய தபால் பரிமாற்றத்தில் கடிதங்கள் தேங்கி நிற்பதாக தபால் மாஅதிபர் சுட்டிக்காட்டுகின்றார்.
பதிவுத் தபால்களை விநியோகிப்பதற்கு விசேட திட்டம் முன்னெடுப்பு
Reviewed by NEWMANNAR
on
July 03, 2015
Rating:

No comments:
Post a Comment