தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை வேட்புமனு தாக்கல்!
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை வடகிழக்கின் 5 தேர்தல் மாவட்டங்களிலும் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியின் பின்னர் தாக்கல் செய்யவுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியாவில் இடம்பெற்ற கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களுடைய கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானித்தமைக்கு அமைவாக குறித்த வேட்புமனுக்களை, நாளைய தினம் 5 மாவட்டங்களிலும் கூட்டமைப்பு தாக்கல் செய்யவுள்ளது.
இதேவேளை நாளைய தினம் ஈ.பி.டி.டி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் சில சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்வரும் 13ம் திகதி வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான இறுதி நாளில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளது எனவும் தேர்தல் களத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை வேட்புமனு தாக்கல்!
Reviewed by NEWMANNAR
on
July 09, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 09, 2015
Rating:


No comments:
Post a Comment