அண்மைய செய்திகள்

recent
-

கடைசி போட்­டியில் குஷல் அதிரடி; பாகிஸ்தானுக்கு பதிலடி,

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
இலங்கை- பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் இலங்கை அணி 165 ஓட்­டங்­களால் வெற்­றி­பெற்­றது. ஹம்­பாந்­தோட்டை மைதா­னத்தில் நேற்று நடை­பெற்ற இந்­தப்­போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்று இலங்கை அணி முதலில் துடுப்­பெ­டுத்­தா­டி­யது.

அதன்­படி இலங்கை அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 ஓவர்­களில் 4 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து 368 ஓட்­டங்­களை விளா­சி­யது. இலங்கை அணியின் குஷல் பெரேரா, தில்ஷான் ஆகியோர் தொடக்க வீரர்­க­ளாக களம் இறங்­கி­னார்கள். இரு­வரும் தொடக்கம் முதலே சிறப்­பாக விளை­யாடி வந்­தனர். இதனால் இவர்­க­ளது விக்­கெட்டை வீழ்த்த பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்­க­வில்லை.





குஷல் 4 சிக்­ஸர்கள் மற்றும் 9 பவுண்­ட­ரி­க­ளுடன் 116 ஓட்­டங்­களைப் பெற்றார். மறு­மு­னையில் தில்ஷான் இவ­ருக்கு துணை நின்று 62 ஓட்­டங்­களை விளா­சினார். தொடக்க வீரர்கள் இரு­வருமே ரன் அவுட் முறையில் ஆட்­ட­மி­ழந்­தனர்.

இரண்­டா­வது விக்­கெட்­டிற்­காக கள­மி­றங்­கிய திரி­மான்னே 30 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். தினேஷ் சந்­திமால் 29 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க, அணித் தலைவர் அஞ்­சேலா மெத்­தியூஸ் கள­மி­றங்­கினார். இவ­ருக்கு துணை­யாக மறு­மு­னையில் ஆடி வந்தார் சிறி­வர்­தன. இந்த இணை அதிரடியை கையில் எடுக்க ஓட்ட எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்தது.

இந்த ஜோடி கடைசி 55 பந்­து­களில் (9.1 ஓவ ரில்) 114 ஓட்­டங்­களைக் குவித்­தது. இது ஓவ­ருக்கு சரா­ச­ரி­யாக 12.43 ஓட்­டங்­க­ளாகும். பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக இலங்கை அணியின் அதி­க­பட்ச ஓட்­டமும், ஒட்­டு­மொத்த 3ஆவது அதி­க­பட்ச ஓட்­டமும் இது­வாகும்.

மெத்­தியூஸ் 70 ஓட்­டங்­க­ளு­டனும், சிறி­வர்­தன 52 ஓட்­டங்­க­ளு­டனும் களத்­தி­லி­ருந்து 368 ஓட்­டங்கள் வரை அணியின் ஓட்ட எண்­ணிக்­கையை உயர்த்­தினர்.

369 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கள­மி­றங்­கிய பாகிஸ்தான் அணி 203 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் பறி­கொ­டுத்து 165 ஓட்­டங்­களால் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது. இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாகக் கள­மி­றங்­கிய அசார் அலி 35 ஓட்­டங்­க­ளு­டனும், அஹமட் சேஷாத் 18 ஓட்­டங்­க­ளு­டனும் ஆட்­ட­மி­ழக்க ஆரம்­பத்­தி­லேயே பாகிஸ்தான் ஆட்டம் கண்­டது.

அடுத்து வந்த ஹபீஸும் 37 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க அடுத்­த­டுத்துக் கள­மி­றங்­கிய அனைத்து வீரர்­களும் சொற்ப ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்து ஏமாற்­றினர். இறு­தியில் பாகிஸ்தான் அணி 37.2 ஓவர்­களில் 203 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது.

பந்­து­வீச்சில் சேனா­நா­யக்க 3விக்­கெட்­டுக்­க­ளையும், பெரேரா 2 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தினர். இந்தப்போட்டியில் இலங்கை வெற்றிபெற்றிருந்தாலும் தொடரை பாகிஸ்தான் 3 –2 என்ற அடிப்படையில் வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கடைசி போட்­டியில் குஷல் அதிரடி; பாகிஸ்தானுக்கு பதிலடி, Reviewed by Author on July 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.