அண்மைய செய்திகள்

recent
-

சரியான தலைமைத்துவத்தினால் வடக்கு, கிழக்கில் தமிழ் காப்பாற்றப்பட்டுள்ளது: யோகேஸ்வரன்


வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் சரியான தலைமைத்துவத்தின் கீழ் வழி நடத்தப்பட்டதன் காரணமாகவே நாம் தமிழர்களாகவும் எமது மொழியைப் பின்பற்றபவர்களாக தமிழ் இனத்தைக் காப்பாற்றி வருகிறோம் என முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பார் வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

“எமது நாட்டில் வடக்கு கிழக்குக்கு வெளியே பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் அடையாளங்கள் திட்டமிட்டவகையில் அழிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இந்துக்களின் புராதான ஆலயங்களின் ஒன்றான கதிர்காமத்தில் முருகன் மட்டும் இருக்கிறார். அந்த பிரதேசத்தில் பூர்வீக குடிகளாக வாழ்ந்த தமிழர்கள் அந்த பிரதேசத்தை விட்டு வெளியேறி விட்டனர்.

சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தில் அடையாளங்கள் மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு எமது தமிழினம் அழிந்து கொண்டு போகிற வரலாற்றை கண்முன்ணே காண்கிறோம்.

ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சரியான தலைமைத்துவங்கள் இருந்ததன் காரணமாக நாம் தமிழர் தமிழ் மொழியைப் பின்பற்றுபவர்கள் என எமது இனமும் எமது அடையாளங்களும் காப்பாற்றப்பட்டு வந்துள்ளன.

இந்த நாட்டில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தமிழினம் தமது அடையாளங்களையெல்லாம் இழந்து நிற்கின்ற நிலையில் வடக்கு கிழக்கு மகாணங்களில் தமிழினம் தங்களது அடையாளத்தை பாதுகாத்துக் கொண்டிருக்குதென்றால் அது தந்தை செல்வாவை முன் நிறுத்தி தலைமைத்துவமும் அவர்கள் கொண்டு வந்த வழியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் எமது பிரதேசத்தை ஆழக்கூடிய நிலையில் செல்ல வேண்டுமென்றால் இந்த விமர்சனங்களையெல்லாம் துக்கிப்போட வேண்டும்.

தேசிய சிங்கள கட்சிகளில் தமிழ் வேட்பாளர்களை நிறுத்தி தமிழ் வாக்குகளைப் பிரித்து அதன் மூலம் தமிழ் மக்கள் பலவீனமடைந்து ஒரு உறுதியான முடிவைக் கொடுக்க முடியாத நிலைக்கு தமிழ் மக்களை உருவாக்குவது இவர்களது நோக்கமாக உள்ளது.

தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை கூடுதலாக ஆதரித்து அவர்கள் தமிழ் தேசிய கொள்கையில் நிற்கின்றார்கள் என்ற நிலைப்பாட்டை தெரிவித்தாலும் கூட அதை பலவீனப்படுத்த தேசிய சிங்கள மற்றும் மாற்றுக் கட்சிகளில் தமிழர்கள் போட்டியிடுகிறார்கள்.

தேசிய சிங்கள மற்றும் மாற்றுக் கட்சிகளில் போட்டியிடுகின்ற தமிழ் வேட்பாளர்களுக்கு வழங்கும் வாக்குகள் வீனானவை அந்த வாக்குகள் மூலம் அவர்கள் தெரிவு செய்யப்படப் போவதில்லை.

எனக்குத் தெரிந்தவரை அனேகமாக அந்த வாக்கு மூலம் தேசிய சிங்கள கட்சிகளில் உள்ள முஸ்லிம்கள் பெற்றி பெற நீங்கள் உதவப் போகின்றீர்கள்.

இந்தத் தேர்தல் முடிவு தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஒரு நிரந்தரமான, நியாயமான அரசியல் தீர்வு அத்தியாவசியம். அது நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வாக அமைய வேண்டும்.

அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் அமைய வேண்டும். மக்களின் இறைமையை மதிக்கக் கூடியதாக அமைய வேண்டும். நிலை நிக்க கூடியதாக அமைய வேண்டும்.

எமது மக்கள் குறைந்தது 80 அல்லது 85 வீதம் வாக்களிக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் அளிக்கும் வாக்கு வீதத்தை தாண்டி அதிகளவில் நாங்கள் வாக்களிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் நாங்கள் எமது இலக்கை அடைய முடியாது. எமது மக்களை வாக்களிப்பில் ஈடுபடுத்த அனைவரும் பாடுபடவேண்டும்.

வெல்வோம் வெல்வோம் என்று நாங்கள் அசட்டையாக இருக்க முடியாது. வெல்வதற்கான வழிகளை நாங்கள் இனங்கண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த கடமைகளில் எல்லோரும் ஈடுபட வேண்டும்.

நாங்கள் இங்கு அதிகளவான வாக்களிப்பினை மேற்கொள்ளாவிட்டால் எந்த வகையிலும் எமது இலக்கு பாதிப்படையலாம். எனவே எமது இலக்கை உறுதி செய்ய வேண்டியது எமது ஒவ்வாருவரின் கடமையாகும்” என்றார்.

வாழைச்சேனை ஆலங்குளம் மாணவர்களுக்கு லண்டன் செல்வ விநாயகர் ஆலயம் உதவி

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை லண்டன் செல்வ விநாயகர் ஆலயம் மூலம் பெறப்பட்ட அப்பியாசக் கொப்பிகளை வாழைச்சேனை ஆலங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு புதன்கிழமை வழங்கி வைத்தனர்.

பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன், பேரவை பிரதி நிதிகளான ச.ஜெயகரன், பூ.ஐங்கரநேசன், த.ஆனந்தகிசோ, ச.துலக்ஷன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

இவ் உதவியை வழங்கிய மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர், லண்டன் செல்வ விநாயகர் ஆலய நிருவாகத்தினர் ஆகியோருக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவித்தனர்.

சரியான தலைமைத்துவத்தினால் வடக்கு, கிழக்கில் தமிழ் காப்பாற்றப்பட்டுள்ளது: யோகேஸ்வரன் Reviewed by NEWMANNAR on July 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.