அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாண கூட்டுறவு அமைச்சின் பனை வாரம் யாழில் ஆரம்பம் (Photos)

வட மாகாண கூட்டுறவு அமைச்சினால் ஒரு வார காலம் பனை வாரமாக பிரகடனப்படுத்தி நேற்று நல்லூர் சங்கிலியன் தோப்பில் பனை உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வில் வட மாகாண பதில் முதலமைச்சரும் கல்வி பண்பாட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான த.குருகுலராசா கண்காட்சியை திறந்து வைத்தார்.

வட மாகாணத்திற்கு உட்பட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் பல்வேறு காட்சிக் கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தன பனை உற்பத்திப் பொருட்கள்விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந் நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்கள்; சீ.வீ.கே.சிவஞானம் பா.கஜதீபன் எஸ்.சிவயோகம் மற்றும் பிரதம செயலாளர் எஸ்.பத்திநாதன் உட்பட அமைச்சுகளின் செயலாளர்கள, கூட்டுறவுத் திணைக்கள உயர் அதிகாரிகள் அலுவலர்கள் என் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு ஒலைப் பெட்டிகளில் பனங்காய் பனியாரம், புழுக்கொடியல் மா, பனங்கட்டியுடனும், பனம் கஞ்சி பிலாவில் வழங்கப்பட்டது .

இந்த உணவு முறை விருந்தினர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.






வட மாகாண கூட்டுறவு அமைச்சின் பனை வாரம் யாழில் ஆரம்பம் (Photos) Reviewed by NEWMANNAR on July 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.