உள்ளூர் மற்றும் இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளினால் சேதப்படுத்தப்படும் மன்னார் மீனவர்களின் பெறுமதி வாய்ந்த வலைத்தொகுதிகள்.
உள்ளூர் மற்றும் இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளினால்(டோலர்) மன்னார் மாவட்ட மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்படுவதாக மன்னார் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த 20 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இன்று 23 ஆம் திகதி வியாழக்கிழமை ஆகிய நான்கு தினங்களுக்குள் மன்னார் மாவட்ட மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைத்தொகுதிகள் உள்ளூர் மற்றும் இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளினால்(டோலர்) சேதப்படுத்தப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
-பேசாலை,பள்ளிமுனை,கோந்தப்பிட்டி ஆகிய கிராமங்களில் உள்ள மீனவர்களில் பலர் இழுவைப்படகுகளினால்(டோலர்) மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல் இந்திய மீனவர்களும் இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக உள்ளூர் மற்றும் இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் வாரத்தில் மூன்று தினங்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பலகமுனைபாடு,தாழப்பாடு,மிரானாபாடு ஆகிய கடற்பகுதிகளில் வலைக்கப்பட்டுள்ள மீனவர்களில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் வலைகளை தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றது.
-இதனால் பணங்கட்டிக்கோட்டு,எருக்கலம்பிட்டி,விடத்தல் தீவு ஆகிய கிராம மீனவர்கள் அதிகலவில் பாதீப்படைந்துள்ளனர்.
-குறிப்பாக மன்னார் பணங்கட்டிக்கோட்டு கிராம மீனவர்கள் அதிகலவில் பாதீக்கப்பட்டுள்ளனர்.
வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்தும்,வட்டிக்கு பணத்தை பெற்றும்,வங்கிகளில் கடனைப்பெற்றும் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை கொள்வனவு செய்து மீன் பிடிக்க கடலில் போட்டால் இழுவைப்படகுகள் இவ்வாறு சேதத்தை ஏற்படுத்தினால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியாது உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்சினை தொடர்பாக மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் பல முறை பாதீக்கப்பட்ட மீனவர்கள் முறைப்பாடு செய்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாது அசமந்தப்போக்குடன் செயற்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாதீப்புக்கள் குறித்து பாதீக்கப்பட்ட மீனவர்கள் மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
July 23, 2015
Rating:
No comments:
Post a Comment