அண்மைய செய்திகள்

recent
-

வலைப்பந்தாட்ட உலக சம்பியன் ஆஸி. : இலங்கைக்கு கடைசி இடம்,,,

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
சிட்னி ஒலிம்பிப் பார்க்கில் நடை­பெற்ற 14ஆவது உலகக் கிண்ண வலை­ப்பந்­தாட்டப் போட்­டி­களில் அவுஸ்­தி­ரே­லியா சம்­பி­ய­னா­னது.



பத்து நாட்­க­ளாக நடைபெற்ற 16 நாடுகள் பங்­கு­பற்­றிய உலகக் கிண்ண வலை­ப்பந்­தாட்டப் போட்­டி­களின் இறுதி ஆட்­டத்தில் முன்னாள் சம்­பி யன் நியூ­ஸி­லாந்தை ஆல்ஃபோன்ஸ் எரினா அரங்கில் நேற்று எதிர்த்­தா­டிய அவுஸ்­தி­ரே­லியா கடும் சவா­லுக்கு மத்­தியில் 58 – 55 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று பதி­னோ­ரா­வது தட­வை­யாக உலகக் கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தது.

சம்­பி­ய­னான அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு தங்கப் பதக்­கமும் இரண்டாம் இடத்தைப் பெற்ற நியூ­ஸி­லாந்­துக்கு வெள்ளிப் பதக்­கமும் வழங்­கப்­பட்­டன.

அத்­துடன் உலகக் கிண்ண வலை­ப்பந்­தாட்ட வர­லாற்றில் இரண்­டா­வது தட­வை­யாக அவுஸ்­தி­ரே­லியா ஹட் - ட்ரிக் முறையில் சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்­தது.
நேற்­றைய இறுதிப் போட்­டியின் ஆரம்ப கால் மணி நேரப் பகு­தியில் அபார ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­திய அவுஸ்­தி­ரே­லியா 16–7 என்ற கோல்கள் கணக்கில் முன்­னிலை அடைந்­தது.

ஆனால் அடுத்த மூன்று கால் மணி நேர பகு­தி­க­ளிலும் முறையே 15–14, 15–13, 18–15 என்ற கோல்கள் கணக்கில் நியூ­ஸி­லாந்து முன்­னி­லையில் இருந்­தது.
ஆனால் முதலாம் கால் மணி நேர ஆட்டப் பகு­தியில் பெற்ற 9 கோல் வித்­தி­யாசம் அவுஸ்­தி­ரே­லியா சம்­பி­யா­னா­வ­தற்கு போது­மா­ன­தாக அமைந்­தது.

இந்த சுற்றுப் போட்­டியில் 321 கோல்­களை மொத்­த­மாக போட்ட மலா­வியின் முவாய் கும்­வெண்டாஇ உலகக் கிண்ண வலைப்­பந்­தாட்டப் போட்­டி­களில் அதி சிறந்த வீராங்­க­னைக்­கான விருதை வென்­றெ­டுத்தார்.

உலகக் கிண்ண வலைப்­பந்­தாட்ட போட்­டி­களில் இலங்கை ஒரு போட்­டி­யில்­தானும் வெற்­றி­பெ­றா மல் 16ஆவது இடத்தைப் பெற்­றது. இம்­முறை உலகக் கிண்ணப் போட்­டி­களில் விளை­யா­டிய எட்டு போட்­டி­க­ளிலும் இலங்கை தோல்வி அடைந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

நெட்போல் சென்ட்ரல் உள்­ளக அரங்கில் நேற்று நடை­பெற்ற 15ஆம்இ 16ஆம் இடங்­களைத் தீர்­மா­னிக்கும் போட்­டியில் சிங்­கப்­பூ­ரிடம் 59–32 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் இலங்கை தோல்வி அடைந்­தது. சிங்­கப்­பூ­ரிடம் இலங்கை அடைந்த இரண்­டா­வது தோல்வி இது­வாகும்.

குழு 'சி'யிற்­கான முன்­னோடி லீக் போட்­டி­யிலும் சிங்­கப்­பூ­ரிடம் 56–43 என்ற கோல்கள் அடிப்ப­டையில் இலங்கை தோல்வி அடைந்­தி­ருந்­தது. இந்த இரண்­டா­வது தோல்­வி­யானது இலங்கை எந்த வகை­யிலும் முன்னேற்றம் அடை­ய­வில்லை என்­பதை எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

இந்தத் தோல்விக்கு தங்­க­ளது அணி பயிற்­சியில் ஈடு­ப­டு­வ­தற்கு போதிய கால அவ­காசம் கிடைக்­க­வில்லை என இலங்கை அணியின் பதில் அணித் தலைவி கயனி திசா­நா­யக்க தெரி­வித்தார். சிங்கப்பூருடனான போட்டியில் முதல் மூன்று கால்மணிநேர பகுதிகளிலும் முறையே 16–8, 20–4, 13–9 என பின்னிலையில் இருந்த இலங்கை நான்காவது கால் மணி நேரப் பகுதியில் கடும் முயற்சியுடன் விளையாடி 11 – 10 என முன்னிலை வகித்தது.

வலைப்பந்தாட்ட உலக சம்பியன் ஆஸி. : இலங்கைக்கு கடைசி இடம்,,, Reviewed by Author on August 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.