அண்மைய செய்திகள்

recent
-

நீதி, நியாயமான பொதுத் தேர்தல்: புதிய அரசியல் கலாசாரத்துக்கு அடித்தளம்,,,

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
கபே அமைப்பு பாராட்டு

இலங்கை தேர்தல் வரலாற்றில் நீதி யாகவும் சட்டத்துக்கு உட்பட்டதாகவும் நடத்தப்பட்ட தேர்தலாக நேற்றைய தேர்தல் அமைந்திருப்பதாக கபே அமை ப்பு தெரிவித்துள்ளது.

நீண்ட காலத்தின் பின்னர் பொலிஸ் அதிகாரிகளும், தேர்தல் அதிகாரிகளும் உயர்மட்டத்திலிருந்து எதுவித அழுத்தங்களுமின்றி செயற்பட்ட தேர்தலாகவும் இத்தேர்தல் அமைந்திருப்பதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கூறினார். கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலத் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் வன்முறைகள் குறைந்த தேர்தலாகவும், அரசவளப் பயன்பாடு, சொத்துக்கள் மற்றும் நபர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறைவான தேர்தலாகவும் இத்தேர்தல் அமைந்துள்ளது. இதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்டத்திலிருந்து தேர்தல் திணைக்கள அதிகாரிகளுக்கோ பொலிஸ் அதிகாரிகளுக்கோ எதுவித அழுத்தங்களும் கொடுக்கப்படாமையே காரணமாகும். கடந்த காலத்தில் இருந்த தேர்தல் அதிகாரிகளும், பொலிஸ் அதிகாரிகளுமே இத்தேர்தலிலும் கடமையாற்றியிருந்தனர். இருந்தபோதும் அரசியல் மற்றும் தேர்தல் கலாசாரம் மாற்றமடைவதற்கான ஆரம்பமாக இத்தேர்தலைப் பார்க்கமுடியும் என்றும் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டார்.

1956ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசாங்க அதிகாரிகள் சுயாதீனமாகச் செயற்படக்கூடிய தேர்தலாகவுள்ளது. 19ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையானது தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தமது கடமையை செய்வதற்கு உறுதுணையாக அமைந்தது என்றும் அவர் கூறினார்.

கடந்த காலங்களைப் போலன்றி தேர்தல்கள் ஆணையாளரால் வழங்கப்படும் பணிப்புரைகள் பொலிஸ்மா அதிபரால் நேரடியாக பொலிஸ் அதிகாரிகளுக்குச் சென்றதுடன் அவர்கள் அதனை நடை முறைப்படுத்தியிருந்தனர்.

தேர்தல் தினமான நேற்று 10, 12 வாகனங்கள் பேரணிகளாகச் சென்றன. அரை மணி நேரத்தில் அவ்வாறான வாகனப் பேரணிகளைத் தடுத்து அவற்றில் ஒட்டப்பட்டிருந்த பிரசார ஸ்டிக்கர்களை கட்சிபேதமின்றி அகற்றுவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

நாடு முழுவதிலும் 65 முதல் 70 வீதம் வரையான வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த காலங்களில் வாகன இலக்கத்தகடுகள் இல்லாத வாகனங்களில் சென்று அச்சுறுத்தும் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இம்முறை மிகவும் குறைந்துள்ளன. அத்துடன் சில இடங்களில் மதுபானம் வழங்கப்பட்டமை குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைந்துள்ளது என்றும் கீர்த்தி தென்னக்கோன் மேலும் தெரிவித்தார்.

நீதி, நியாயமான பொதுத் தேர்தல்: புதிய அரசியல் கலாசாரத்துக்கு அடித்தளம்,,, Reviewed by Author on August 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.