நல்லிணக்கம், பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் காட்டவேண்டும்...
இலங்கையில் தெரிவுசெய்யப்பட்டுள்ள புதிய அரசாங்கம் நல்லாட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் மேலும் முன்னேற்றத்தை வெளிக்காட்ட வேண்டு மென்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் மிகவும் அமைதியான ரீதியிலும், பரந்துபட்ட பங்களிப்புடனும் வாக்களித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். தேர்தலை சிறப்பாக நடத்தியமை தொடர்பில் ஜனாதிபதியை பாராட்டுகின்றோம். அதுமட்டுமன்றி இலங்கை மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவதற்கு முன்னுதாரணமாக நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையாளரையும் பாராட்டுகின்றோம்.
இதேவேளை இலங்கையில் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய அரசாங்கம் நல்லாட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் மேலும் முன்னேற்றத்தை வெளிக்காட்ட வேண்டும். அத்துடன் ஜனாதிபதி , பிரதமர், அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களுடன் இணைந்து நிரந்தரமான சமாதானத்தைக் கட்டியெழுப்ப தயாராக இருக்கின்றோம்.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் காட்டவேண்டும்...
Reviewed by Author
on
August 20, 2015
Rating:

No comments:
Post a Comment