கூட்டமைப்பு மூன்றாவது சக்தியாக உருவெடுத்தமை வரவேற்கத்தக்கது,,,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒற்றுமையுடன் செயற்பட்டதன் காரணமாகவே தேர்தல் அமை தியானதும் நீதியானதுமான முறையில் நடைபெற்றது. நாட்டின் ஆட்சியில் சமாதானத்தையும் நீதியையும் நிலைநாட்ட எதிர்காலத்திலும் மைத்திரி - ரணில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என சமூக நீதிக் கான மக்கள் அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.
தேர்தலில் 3 ஆவது இடத்தினை தக்கவைத்துக்கொண்டுள்ள கட்சி தமிழ் தேசிய கூட்மைப்பாக இருப்பது வரவேற்கதக்கது. நாட்டு மக்களும் அவர்களை ஏற்றுக்கொண்டு இனவாதம் இன்றி செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆட்சி அமைக்கவுள்ள ஐக்கிய தேசிய கடசியினர் கடந்த 100 அரசாங்கத்தில் நிறைவேற்றாத விடயங்களை எதிர்வரும் 5 வருட காலத்தில் முற்றாக பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு சன சமூக நிலையத்தி்ல் நேற்று புதன் கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
,
கடந்த 6 மாதகாலம் மக்கள் நல்லாட்சியின் முன்னோட்டம் ஒன்றை காண்பிப்பதற்கு வரம் ஒன்றை கொடுத்திருந்தனர். அதன் போது நீதியானதொரு ஆட்சியை ஜனாதிபதி மைத்தியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நடத்திக்காட்டியிருந்தனர்.
நடந்து முடிந்த தேர்தலின்போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது நிறைவேற்று அதிகாரதத்தினை பயன்படுத்தாது முழு அதிகாரத்தினையும் தேர்தல்கள் ஆணைளயாருக்கு வழங்கியிருந்தமை வரவேற்க்த் தக்க விடயம். அதேவேளை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தனது அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி ஜனாதிபதியின் பேச்சையும் நிறுத்தும் அளவுக்கு நாட்டில் நீதி நிலைபெற்றிருந்துள்ளமை வரலாற்றில் இது முதல் தடவையாகும்.
அத்தோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமது அதிகாரத்தினையும் பதவியையும் தேர்தலுக்காக பயன்படுத்திக்கொள்ளாதிருந்தார். இது அரச தலைவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும்.
அதேவேளை கடந்தகாலத்தில் தேர்தல்கள் இடம் பெற்று முடிந்த பின்னர் நாட்டில் வன்முறை இடம் பெறாதிருக்க விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும். ஆனால் இம்முறை அதற்கான தேவையே இல்லாது போயுள்ளது.தேர்தலின் முன்னரும் பொலிஸாரின் செயற்பாடுகள் பக்கசார்பற்றதும் சுதந்திரமானதுமாக அமைந்திருந்நமையினால் தேர்தலின் பின்னரும் பாதுகாப்பு தேவை குறைவாகவே இருந்தது.
கடந்த ஜனவரி எட்டாம் திகதி மக்கள் வைத்த பரீட்சையில் தேர்ச்சி பெற்றமைக்கான அடையாளங்கள் ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்தமையினால் நாட்டு மக்கள் தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சிக்கு நிலையானதொரு ஆட்சி பலத்தை கொடுத்துள்ளனர்.
கடந்த தேர்தல்களின் போது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மக்களுக்கு பல வாக்குறுதிகளை முன்வைத்திருந்த போதும் 100 நாள் திட்டத்தின் பிரகாரம் அவற்றில் அனைத்தையும் நிறைவேற்ற முடியாது போய்விட்டது.
ஆனால் 100 நாள் திட்டத்தின் போது மக்கள் நலன் கருதிய பல திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு ரணில்- மைத்திரி ஆகியோரின் ஒற்றுமையே காரணமாகியது. அந்த ஒற்றுமை தொடரும் பட்சத்தில் தற்போது கிடைத்துள்ள மக்கள் வரத்தை ஐக்கி தேசிய கட்சி தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள அது வாய்ப்பாக அமையும்.
அத்தோடு தற்போதைய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆவது இடத்தை தனதாக்கிக்கொண்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அவர்களுக்கான பலத்தை வழங்கத்தவறாது என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டு மக்களும் அவர்களை சிறுபாண்மை என்பதையும் விட அவர்களும் நாட்டு பிரஜைகளே என்று மதிப்பளிக்க வேண்டும். அது நல்லாட்சிக்கு மாத்திரமன்றி நல்லிணக்கதிற்கும் வழிசெய்யும்.
இம்முறை தேர்தலில் இனவாதிகளை மக்கள் தூக்கியெறிந்துள்ளனர் அதன் ஒரு அங்கமாகவே நாட்டு மக்களினால் பொது பல சேனா என்ற இனவாத கட்சி முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இனவாதிகள் மீது விழும் முதல் அடி இது.இதனால் நாட்டு மக்கள் அரசியல் ரீதியிலும் அவதானமாகத்தான் உள்ளனர் என்பது தெ ளிவாகிறது.
அதனால் கடந்த அரசாங்கம் போன்று இந்த அரசாங்கமும் தனது சுய தேவைகள் நிமித்தம் செயற்படாதிருக்கும் வகையில் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க நாம் உட்பட் அரசாஙகத்தை தெரிவு செய்த 14 கட்சிகள் கைகோர்த்துள்ளன.
அதனால் அவ்வாறு நிறைவேற்ற முடியாது போய்விட்ட தகவல் அறியும் சட்டமூலம், முழுமையான நிறைவேற்று அதிகார குறைப்பு மற்றும் 20 ஆவது திருத்தம் போன்றன அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற அவசியம் உள்ளது. அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு மேற்குறித்த விடயங்களை நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ளது.அது தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திட்டுள்ளோம்.
அதனால் எதிர்வரும அரசாங்கம் மக்கள் சேவை செய்யும் அமைச்சரவை ஒன்றை உருவாக்கித்தர வேண்டும் அந்த கடமை அரசாங்கத்தினையே சாரும்.அவர்களின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்களின் நிர்வாகிகளும் பக்கசார்பற்றவர்களாக செயற்பட வேண்டும்.அத்துட்ன் செயலாற்றல்மிக்க செயலாளர்களை தெரிவு செய்ய வேண்டிய அவசியமும் அரசாங்கத்தை சாரும்.
அரசாங்கமும் பழிவாங்கல் இல்லாத குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு இடமளிக்க வேண்டும். இவ்வாறு அரசாங்கம் நீதியான முறையில் முன்னெடுக்கும் போது அதற்காக அனைத்துக்கட்சிகளும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். கட்சி பேதங்கள் இல்லாத தேசிய அரசாங்கத்தில் நாட்டு மக்களுக்கான் சேவைகள் சரிவர கிடைக்கப்பெற வேண்டும்.
இவை அரசாங்கத்தில் கிடைக்குமா கிடைக்காதா என்ற பிரச்சிணை ஒருபுறமிருக்க தற்போதைய தேர்தலில் தமக்கு தேவையான பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளோமா என்ற என்ற கேள்விக்கு சரியான பதில் இன்னும் கிடக்கப்பெறவில்லை. அது எவ்வாறிருப்பினும் அரசியல் தலைவர்களை மக்கள் சேவை செய்பவர்களாக மாற்றும் செயற்பாட்டினை இந்நாட்டு மக்களே செய்ய வேண்டும்.
எவ்வாறாயினும மைத்திரி ரணில் ஒற்றுமையின் மூலம் மட்டுமே நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என தீர்மானித்தே மக்கள் மீண்டும் ஆட்சி பலத்தை ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்கியுள்ளனர். 100 நாள் அரசாங்கம் மீண்டும் ஆட்சி செய்ய உள்ளமையினால் 100 நாள் திட்டத்தில் செய்ய முடியாது போன செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க நாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் என்றார்.
கூட்டமைப்பு மூன்றாவது சக்தியாக உருவெடுத்தமை வரவேற்கத்தக்கது,,,
Reviewed by Author
on
August 20, 2015
Rating:

No comments:
Post a Comment