தொழில் வீசா முறைகேடு: இலங்கையை கறுப்புப் பட்டியலில் சேர்க்க இத்தாலி அச்சுறுத்தல்!,,,
தமது நாட்டின் தொழில் சந்தையில் இலங்கையை கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்போவதாக இத்தாலி அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
இத்தாலியில் வேலைவாய்ப்புக்களுக்காக ஒதுக்கப்பட்ட 480 இடங்கள் தனியார் துறையினருக்கு விற்பனை செய்யப்பட்டு அதன் மூலம் 500 மில்லியன் ரூபாய்கள் வரை திரட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொதுமுகாமையாளர் மங்கள ரண்தெனியவின் தகவல்படி இத்தாலி அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக 594 தொழில் வீசாக்களை கடந்த வருடம் வழங்கியிருந்தது
எனினும் இதில் 114 க்கு மாத்திரமே உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வீசாக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன
எஞ்சிய வீசாக்கள் யாருக்கு வழங்கப்பட்டன என்பது தொடர்பில் தகவல்கள் எவையும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இந்த தொழில் வீசாக்களின்கீழ் தொழில்பெறுவோருக்கு குறைந்தது இலங்கை நாணயப்படி ஒரு லட்சம் ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் 480 வீசாக்கள் முன்னைய அரசாங்க அதிகாரிகளால் கறுப்புச்சந்தையில் இந்த வீசாக்கள் பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தொழில் வீசா முறைகேடு: இலங்கையை கறுப்புப் பட்டியலில் சேர்க்க இத்தாலி அச்சுறுத்தல்!,,,
Reviewed by Author
on
August 02, 2015
Rating:

No comments:
Post a Comment