ஜப்பானில் கொனி சுழல் காற்று : பல உயிர்கள் பலி...
ஜப்பான் மற்றும் வடக்கு பிலிப்பைன்சில் நேற்று இரவு தாக்கம் செலுத்திய கொனி சுழல் காற்று காரணமாக இதுவரை 14 பேர் பலியானதுடன் 3 பேர் காணமால் போய் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வீடுகளும் கட்டிடங்களும் பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும் பாரிய கற்கள் மற்றும் சேற்று மண் திட்டுகள் கட்டிடங்களை மூடியுள்ளன எனவும் தெரிவித்தனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான மேட்டு நிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனவும் மண்சரிவு காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கொனி என்று பெயரிடப்பட்டுள்ளதாக சுழல் காற்று மணிக்கு சுமார் 158.8 மைல் வேகத்தில் வீசியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஜப்பானில் இதற்கு முன்னர் 1977ஆம் ஆண்டு 157 மைல் வேகத்தில் புயல் வீசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் கொனி சுழல் காற்று : பல உயிர்கள் பலி...
Reviewed by Author
on
August 24, 2015
Rating:

No comments:
Post a Comment