"அனைத்து இலங்கையர்களின் ஆதரவுக்கு நன்றி" கண்ணீருடன் விடைபெற்றார் சங்கா...
அனைத்து இலங்கையர்களின் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் எனது மனமார்ந்த நன்றி. இறுதிப்போட்டியில் உங்கள் முன் விளையாடக் கிடைத்தமையை பெரும் கௌரவமாக எண்ணுகிறேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார தெரிவித்ததுடன் கண்ணீருடன் விடைபெற்றார்.
குமார் சங்கக்கார தனது இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்தியாவுடன் பி. சரவணமுத்து மைதானத்தில் இன்று இடம்பெற்ற இறுதி நாளில் சங்கக்கார ஆற்றிய உரை நெகிழ்ச்சியாக அமைந்திருந்தது. "தாய்நாட்டுக்காக விளையாடிய 15 ஆண்டுகளும் மிக அற்புதமானவை. அந்த அனுபவங்களையும் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பையும் என்னால் என்றுமே மறக்க முடியாது. வெற்றியோ தோல்வியோ, எதையும் பாராமல் என்மீது அனைவருமே அன்பு காட்டினீர்கள்.
அனைத்து இலங்கையர்களின் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் எனது மனமார்ந்த நன்றி. இறுதிப்போட்டியில் உங்கள் முன் விளையாடக் கிடைத்தமையை பெரும் கௌரவமாக எண்ணுகிறேன். எனது இன்னிங்ஸ் இத்துடன் நிறைவடைகிறது. எனினும் நான் உங்களோடு இருந்து எமது இளம் வீரர்கள் விளையாடுவதை காண மைதானங்களுக்கு வருவேன்" என சங்கக்கார குறிப்பிட்டார்.
சங்கா, தனது பெற்றோருக்கும் குடும்பத்துக்கும் பயிற்றுவிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், இலங்கை கிரிக்கெட் சபை, இந்திய வீரர்கள், இலங்கை ரசிகர்கள் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
"அனைத்து இலங்கையர்களின் ஆதரவுக்கு நன்றி" கண்ணீருடன் விடைபெற்றார் சங்கா...
Reviewed by Author
on
August 24, 2015
Rating:

No comments:
Post a Comment