மேனி அழகை மெருகூட்டச் சென்ற யுவதி பரிதாப மரணம்
மேனி அழகை மெருகூட்டிக் கொள்ள அழகுக் கலை நிலையம் சென்ற யுவதியொருவர் பரிதமாக மரணமடைந்துள்ளார்.
ஆடைக் கைத்தொழிற்சாலையில் பணியாற்றும் யுவதியொருவர் தலைசுற்றி விழுந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துள்ளார்.
திருமண வீடொன்றிற்கு செல்வதற்காக கண்டி தல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த அழகுக் கலை நிலையமொன்றில், மேனி அழகை மெருகூட்டச்சென்ற போது இந்த துரதிஸ்டமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த யுவதி 27 வயதுடையவர் என பொலிஸார் தெரிவி;க்கின்றனர்.
இந்த மரணம் சந்தேகத்திற்கு இடமானது என விசாரணைகளின் மூலம் தெரியந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உடலின் சில பாகங்கள் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேனி அழகை மெருகூட்டச் சென்ற யுவதி பரிதாப மரணம்
Reviewed by Author
on
August 20, 2015
Rating:

No comments:
Post a Comment