தேர்தல் வன்முறைக் குற்றச்சாட்டில் முன்னிற்கும் ஐ.ம.சு.மு, ஐ.தே.க.....
ஆளும் கட்சியான ஐ.தே.க. மற்றும் எதிர்க்கட்சியான ஐ.ம.சு.மு ஆகியவற்றிடமிருந்து இதுவரை ஒரேயளவான தேர்தல் விதி மீறல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளதாக PAFFREL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஐ.தே.கவுக்கு எதிராக 392 குற்றச்சாட்டுகளும், ஐ.ம.சு.முவுக்கு எதிராக 376 குற்றச்சாட்டுகளும் இதுவரை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த அவர், ஜே.வி.பியிற்கு எதிராக 34 குற்றச்சாட்டுகளும் ஏனைய கட்சிகளுக்கு எதிராக 29 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன் இதில் ஐ.தே.க.வைச் சேர்ந்தோர் 62 சந்தர்ப்பங்களில் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்த ஹெட்டியாரச்சி, இச்சம்பவங்களில் ஐ.ம.சு.முவினர் 45 சந்தர்ப்பங்களில் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் இதுவரை ஜே.வி.பி 8 சந்தர்ப்பங்களிலும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தோர் 10 சந்தர்ப்பங்களிலும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
தேர்தல் வன்முறைக் குற்றச்சாட்டில் முன்னிற்கும் ஐ.ம.சு.மு, ஐ.தே.க.....
Reviewed by Author
on
August 12, 2015
Rating:

No comments:
Post a Comment