" வடக்கில் இருப்பவை நாய்க்குட்டிகளல்ல புலிக்குட்டிகள் என்பது நிரூபணம் - சம்பந்தனை நம்பலாம்; ரணிலை நம்ப முடியாது "

சம்பந்தனிடம் எப்போதும் ஒரே கொள்கையும் வெளிப்படையான செயற்பாடுமே உள்ளது. ஆகவே சம்பந்தனை சந்தேகப்படாது நம்ப முடியும். ஆனால் ரணில் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரர்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரணிலை நம்பமுடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். வடக்கில் இருப்பவை நாய்க்குட்டிகள் அல்ல புலிக்குட்டிகள் என்பதை மீண்டும் ஒருமுறை கூட்டமைப்பினர் நிரூபித்து விட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
தேர்தலின் பின்னர் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை உருவாக்குவதற்கான வாக்கெடுப்பினை நடத்த ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என்ற கருத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
யுத்தத்திற்கு பின்னர் வடக்கின் அரசியல்வாதிகள் தமது பாதையினை மாற்றியுள்ளனர் என நாம் நினைத்தாலும் இன்றும் அங்கு பிரிவினைவாத கொள்கையே இயங்கி வருகின்றது. வடக்கில் அரசியல் செய்பவை நாய்க்குட்டிகள் என்ற நினைப்பில் நாம் இருந்தோம். ஆனால் அங்கு இருப்பவை நாய்க்குட்டிகள் அல்ல புலிக்குட்டிகள் என்பதை மீண்டும் ஒருமுறை கூட்டமைப்பினர் நிரூபித்து விட்டனர்.
வடக்குஇ கிழக்கை இணைந்து தனி நாட்டை கோரிய புலிகளின் தலைவன் பிரபாகரனின் கொள்கையிலேயே இவர்கள் இன்றும் செயற்பட்டு வருகின்றனர். இலங்கையில் இருந்து வடக்குஇகிழக்கை பிரிக்க சர்வதேசமும் பிரிவினைவாத அரசியல்வாதிகளுமே முயற்சிக்கின்றனர். உலகில் பல நாடுகளில் இவ்வாறான சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் நடைபெற்றுள்ளது.
ஸ்கொட்லாந்து, கியுபெக், கனடா ஆகிய நாடுகள் சுயநிர்ணய உரிமையை கோரி தம்மை தனிநாடாக மாற்றிக் கொண்டன. ஆனால் அவ்வாறு பிரிந்த நாடுகள் எல்லாம் தனித்த இராச்சியமாகவே காணப்பட்டன. ஆனால் இலங்கையில் வடக்கும் கிழக்கும் அவ்வாறான இராச்சியங்கள் அல்ல. இலங்கை போன்ற நாட்டில் அவ்வாறான தனித்த இராச்சியமாக எந்த மாகாணத்தையும் கருத முடியாது. அதேபோல் இலங்கையின் பூகோள வரலாற்றில் முன்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கும்இ கிழக்கும் தனித்து செயற்பட்ட வரலாறுகள் இல்லை. ஆகவே வடக்கையும் கிழக்கையும் தனி நாடாக மாற்றிக்கொடுக்க வேண்டிய எந்தவித தேவையும் இல்லை.
அதேபோல் அரசியல்வாதிகளின் தேவைக்கும், சர்வதேச தேவைக்கும் ஏற்ப செயற்பட முடியாது. வடக்கு கிழக்கு மக்கள் தாம் தனித்து போக விரும்புவதானால் மக்களின் விருப்பத்துக்கு அமைய ஒரு வாக்கெடுப்பை நடத்த வேண்டும். மாறாக சர்வதேசம் தாம் விரும்பும் காரணத்தினால் நாட்டை பிரிக்க இடம்கொடுக்க முடியாது.
இவ்வாறான நிலையில் இம்முறை பொதுத் தேர்தலின் பின்னர் தவறியேனும் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் பிரதமராக தெரிவானால் இந்த நாட்டின் பூகோள வரைபடம் மாற்றப்படும். வடக்கு, கிழக்கு இல்லாத இலங்கை வரைபடத்தினையே இனிமேல் நாம் பார்க்கவேண்டி வரும். சிங்கள, பெளத்த நாடான எமது இலங்கையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்றியமைக்க இந்த நாட்டு சிங்கள மக்கள் இடம் வழங்கக் கூடாது. நாட்டை பிரிக்கும் எந்தவொரு வேலைத்திட்டத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்க மக்கள் அனுமதிக்கக் கூடாது.
கேள்வி :- ஒன்றிணைந்த நாடு என்பதை ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளதே. அப்படி இருக்கையில் நீங்கள் கூறுவது எவ்வாறு சாத்தியமாகும்?
பதில் :- கடந்த 2001ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியினர் ஒன்றிணைந்த நாடு என்ற வாக்குறுதியை கொடுத்தே ஆட்சியமைத்தனர். ஆனால் 2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் ஒஸ்லோ மாநாட்டில் சமஷ்டி உடன்படிக்கையை செய்துகொள்ளவில்லையா? ரணில் விக்கிரமசிங்க என்பவர் மேற்குதேச நாடுகளிடம் மண்டியிட்டு ஆட்சி நடத்தும் ஒரு நபராவார்.
" வடக்கில் இருப்பவை நாய்க்குட்டிகளல்ல புலிக்குட்டிகள் என்பது நிரூபணம் - சம்பந்தனை நம்பலாம்; ரணிலை நம்ப முடியாது "
Reviewed by Author
on
August 06, 2015
Rating:
Reviewed by Author
on
August 06, 2015
Rating:

No comments:
Post a Comment