உளவு பார்ப்பதில் அமெரிக்கா,,,
அமெரிக்காவானது ஜப்பானைச் சேர்ந்த சிரேஷ்ட அரசியல்வாதிகள், மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரி மற்றும் மிட்ஸுபிஸி குழுமம் உள்ளடங்கலான பிரதான கம்பனிகளை உளவு பார்த்ததாக நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவால் ஜப்பானில் உளவு பார்க்கப்பட்ட குறைந்தது 35 இலக்குகளின் பட்டியலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
மேற்படி விக்கிலீக்ஸ் இணையத்தளமானது அமெரிக்காவின் உளவு இரகசியங்களை அம்பலப்படுத்தி வருவதன் மூலம் கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சேவை ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளடங்கலான நாடுகளை உளவு பார்த்ததாக விக்கிலீக்ஸ் ஏற்கனவே தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேயை அமெரிக்கா உளவு பார்த்ததாக அந்த ஆவணத்தில் குறிப்பிட்டுக் கூறப்படவில்லை என்ற போதும், வாணிப அமைச்சர் யொய்சி மியஸவா மற்றும் ஜப்பானிய மத்திய வங்கியின் ஆளுநர் ஹறுஹிகோ குரோடா உள்ளடங்கலாக அவரது அரசாங்கத்தைச் சேர்ந்த ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்களை அமெரிக்கப் புலனாய்வு பிரிவு உளவு பார்த்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
2006 ஆம் ஆண்டு ஷின்ஸோ அபே முதன் முதலாக பதவியேற்றது முதற் கொண்டு மேற்படி உளவு பார்க்கும் செயற்பாட்டில் அமெரிக்கா ஈடுபட்டதாக விக்கிலீக்ஸ் தெரிவிக்கிறது. அவர் 2012 ஆம் ஆண்டு மீண்டும் அதிகாரத்தை பொறுப்பேற்றிருந் தார்.
அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திலான முக்கிய நட்பு நாடாக ஜப்பான் விளங்கி வருகின்ற நிலையில், விக்கிலீக்ஸால் வெளி யிடப்பட்ட இந்தத் தகவல் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.

உளவு பார்ப்பதில் அமெரிக்கா,,,
Reviewed by Author
on
August 03, 2015
Rating:

No comments:
Post a Comment