தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நாளை முல்லைத்தீவில்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நாளை(11) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு முல்லைத்தீவு தண்ணீருhற்று முள்ளியாவலையில் இடம் பெறவுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் இடம் பெறவுள்ள குறித்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் தலைவர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள்,தமிழ் தேசியக்கூட்டமைப்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட கிளை தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நாளை முல்லைத்தீவில்.
Reviewed by NEWMANNAR
on
August 10, 2015
Rating:

No comments:
Post a Comment