இலவசமாக வாசிப்பு மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்த வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன்-Photos
மன்னாரில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) வாசிப்பு மூக்குக்கண்ணாடிகளை இலவசமாக வழங்கி வைத்தார்.
தனது பிறந்த தினமான நேற்று(9) ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு கண்ணாடிகளை வழங்கி வைத்தார்.
முதற்கட்டமாக நானாட்டான் பகுதியில் 101 பேரூக்கும்,சூரிய கட்டைக்காடு பகுதியில் 102 பேரூக்கும்,அளவக்கை பகுதியில் 50 பேரூக்கும் அவர்களுடைய வயதுக்கு ஏற்ற வகையில் குறித்த வாசிப்பு மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்தார்.
-மேலும் மாவட்டத்தின் ஏனைய கிராமங்களிலும் இவ்வாறு கண்ணாடிகளை இலவசமாக வழங்கி வைக்கவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மேலும் தெரிவித்தார்.
இலவசமாக வாசிப்பு மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்த வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன்-Photos
Reviewed by NEWMANNAR
on
August 10, 2015
Rating:
No comments:
Post a Comment