லண்டனில் இருந்து விடுமுறைக்காக வந்தவர் விபத்தில் மரணம்!
லண்டனில் இருந்து விடுமுறைக்காக வந்தவர் பருத்துறைப்பகுதியில் இடம் பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதில் புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகக் கொண்டவரும் லண்டனில் வசிப்பவருமான தர்மலிங்கம் கோபிநாத் என்பவரே உயிரிழந்தவராவார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
லண்டனில் இருந்து மனைவி, பிள்ளைகளுடன் விடுமுறையில் வந்தவர் கடந்த சனிக்கிழமை(01) பருத்துறைக்கு மோட்டார்சைக்கிளில் பிறிதோரு நபருடன் சென்ற சமயம் ரயர் வெடித்ததில் வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகி மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
தலையில் மிகமோசமாக காயமுற்றதால் மூளை செயற்படாத காரணத்தினால் தொடர்ந்து கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
லண்டனில் இருந்து விடுமுறைக்காக வந்தவர் விபத்தில் மரணம்!
Reviewed by NEWMANNAR
on
August 04, 2015
Rating:

No comments:
Post a Comment