திருச்சி சிறப்புமுகாமில் ஈழத்தமிழ் கணவனும் மனைவியும் தற்கொலை முயற்சி! இருவரும் கவலைக்கிடம்-Photos
திருச்சி சிறப்புமுகாமில் ஈழத்தமிழரான தங்கவேலு மகேஸ்வரன் கடந்த மூன்று ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
உயர்நீதிமன்றம் இவரை விடுதலை செய்ய பரிந்துரைத்தும் விடுதலை செய்யாததினால் இன்று அவரைப் பார்வையிட சிறப்பு முகாமிற்கு அவரது மனைவி திரசாந்தி சென்றுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் கணவனும் மனைவியும் தற்கொலைக்கு முயன்று சுயநினைவு அற்ற நிலையில் பிற்பகல் 5.45க்கு திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.
எனினும் இருவருக்கும் நினைவு திரும்பவில்லை எனவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்கள் எனவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி சிறப்புமுகாமில் ஈழத்தமிழ் கணவனும் மனைவியும் தற்கொலை முயற்சி! இருவரும் கவலைக்கிடம்-Photos
Reviewed by NEWMANNAR
on
August 04, 2015
Rating:

No comments:
Post a Comment