அண்மைய செய்திகள்

recent
-

என்னுடைய மோசமான ஆட்டம் வருத்தமளிக்கிறது: மலிங்கா கவலை,


பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய மோசமான செயல்பாடு வருத்தமளிப்பதாக டி20 அணித்தலைவர் மலிங்கா கவலை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் டெஸ்ட், ஒருநாள் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான், டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இது பற்றி டி20 அணித்தலைவர் மலிங்கா கூறுகையில், புதிதாக அணிக்கு வந்துள்ள வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். அதே சமயம் என்னுடைய மோசமான செயல்பாடு கவலையளிக்கிறது.

இதன் காரணமாக வரும் விமர்சனங்களை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். ஏனெனில் நான் தான் அணித்தலைவர்.

அணிக்கு வந்துள்ள புதிய வீரர்களான கப்புகெதர, சிறிவர்த்தன, தனன்ஜெய ஆகியோர் சிறந்த முறையில் விளையாடினர்.

மேலும், சீனியர் வீரர்களை இழந்த போதும் இலங்கை அணியில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

தொடர் தோல்விகளால் இலங்கை அணி இக்கட்டான நிலையில் இருப்பதாகவும் நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
என்னுடைய மோசமான ஆட்டம் வருத்தமளிக்கிறது: மலிங்கா கவலை, Reviewed by Author on August 02, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.