இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்க்கிறோம்...
இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செய ற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்க்கின்றது என்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஜோன் கிர்பி மேலும் தெரிவிக்கை யில்,
இலங்கையில் நடைபெற்ற பாராளுமன் றத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தையும் மக்களையும் பாராட்டுகின்றோம்.
இதன்மூலம் நாட்டின் ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சிபடுத்தல் என்பன வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் இலங்கையின் தேர்தல்கள் ஆணையாளர், சிவில் சமூக அமைப்பினர், சுயாதீன தேர்தலுக்காக தம்மை அர்ப் பணித்த வேட்பாளர்கள் அனைவரையும் பாராட்டுகின்றோம்.
இலங்கை வரலாற்றில் அமைதியான தேர்தல் நடைபெற்றுள்ளது.
அந்தவகையில் இலங்கை ஜனாதிபதி பிரதமர் மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்க்கின்றது என்றார்.
இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்க்கிறோம்...
Reviewed by Author
on
August 20, 2015
Rating:

No comments:
Post a Comment