போர்க்குற்ற அறிக்கை வௌிவருகையில் நாம் பேரம் பேசும் சக்தியாக இருக்க வேண்டும்..
தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரமான, நியாயமான அரசியல் தீர்வைக் கோரியே எமது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது. ஆனால், மஹிந்த ராஜபக் ஷ முதல் இனவாத அரசியலாளர்கள் வரை நாட்டைப் பிரித்து தமிழீழம் அமைக்கப்போகிறார்கள் எனக் கூக்குரலிடுகின்றனர். நாட்டைப் பிரிக்குமாறு நாம் ஒருபோதும் கோரவில்லை.
இவ்வாறு அம்பாறை மாவட்ட தேர்தல் பரப்புரைக்காக வருகைதந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் பாண்டிருப்பில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
இப்பரப்புரைக்கூட்டம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றபோது அவர் மேலும் கூறுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தமிழ்மக்களின் பிரச்சினையைத் தீர்க்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை. தமிழ்மக்களை துன்பத்திற்குட்படுத்தி அவர்களின் நிலங்களை இராணுவமயமாக்கி, பௌத்தமயமாக்கி அவர்களை நாட்டை விட்டுத் துரத்தும் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டார்.
அதற்காகவே ஜனவரி 8ஆம் திகதி நாமெல்லாம் சேர்ந்து ஆட்சிமாற்றத்தைக் கொணர்ந்தோம். இன்றைய ஜனாதிபதி மைத்திரியை ஒரு ஜனநாயகவாதியாகவே பார்க்கிறேன். அவரது ஆட்சியில் அடுத்த வருடம் எமக்கான தீர்வைப் பெறலாமென நம்புகின்றேன்.
தமிழ்மக்களின் ஏகோபித்த அங்கீகாரம்பெற்ற கட்சியாக த.தே.கூட்டமைப்பே தமிழ்மக்கள் மட்டுமல்ல இலங்கை அரசு மட்டுமல்ல இந்தியஅரசு மட்டுமல்ல சர்வதேசமே ஏற்றுக்கொண்டிருக்கின்றது.
தந்தைசெல்வாவின் கொள்கைகளிலே கடந்த 65வருடகாலமாக பற்றுறுதியுடன் வாழ்ந்துவருகின்ற தமிழினம் ஒருபோதும் வீட்டைம மறக்கமாட்டார்கள் என்பது எமக்குத்தெரியும்.
இந்தநாட்டில் தமிழ்மக்கள் பட்ட கஷ்டம் வலிகள் எண்ணிலடங்காதவை.
10லட்சம் மக்கள் நாட்டைவிட்டு புலம்பெயர்ந்திருக்கிறார்கள்.5லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திரக்கிறார்கள்.
ஜ.நா. போர்க்குற்ற விசாரணை அறிக்கை அடுத்தமாதம் வந்ததும் இலங்கை அரசியலில் பாரியமாற்றம் நிகழலாம். அப்போது நாம் பேரம்பேசும் வலுவுள்ள சக்தியாக இருக்கவேண்டும்.
எனவேதான் வட-கிழக்கிலே 20 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய அனைவரும் வாக்களிக்கவேண்டும். இது எமது புனித கடமை.
எமது தேர்தல் முடிவு எமது விஞ்ஞாபனத்தை இலங்கையும் சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளவைக்கும். அதனூடாக எமக்கு மேலும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்.எம்மை நாமே ஆளவேண்டும். நாம் இரண்டாந்தரப்பிரஜை அல்ல என்றார்.
தமிழரசுக்கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் கலந்துசிறப்பித்தனர்.
போர்க்குற்ற அறிக்கை வௌிவருகையில் நாம் பேரம் பேசும் சக்தியாக இருக்க வேண்டும்..
Reviewed by Author
on
August 09, 2015
Rating:

No comments:
Post a Comment