அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பாடசாலைகளில் சுகாதார மலசலகூட வசதிகள் நடைமுறைப்படத்தப்பட்ட போது ஏற்பட்ட அனுபவங்கள்- ஓர் ஆய்வு M.S.M. Sarook

மன்னார் மாவட்டத்தில் NEP WASH  திட்டத்தினுடாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் சுகாதார மலசலகூட வசதிகள் நடைமுறைப்படத்தப்பட்ட போது ஏற்பட்ட அனுபவங்கள்- ஓர் ஆய்வு

(A research on the Experience which have been achieved through the implementation of sanitation facilities to the selected schools in Mannar District under the NEP WASH project)

M.S.M. Sarook
Sociologist(சமூகவியலாளர்)

National Water Supply and Drainage


அடிப்படை சுகாதார வசதிகளை பெற்றுக் கொள்ளும் உரிமை மனிதர்கள் அனைவருக்கும் உண்டு. அதனை வழங்க வேண்டிய தார்மீக கடப்பாடு நாட்டை ஆளுகின்ற அரசாங்கத்தினை சார்ந்ததாகும். சுகாதார வசதிகள் எங்கு முறையாக இல்லையே அங்கு அது சார்ந்த பிரச்சினைகள் தோன்றி நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் பாரிய தாக்கத்தினை செலுத்தும்.

இதன் அடிப்படையில் மாணவர் சமூதாயத்தின் சுகாதார நலவாழ்வினை முன்னேற்றும் நோக்கில்NEW WASH  திட்டத்தினுடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் சுகாதார வசதி (மலசலகூடம்) வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது பல்வேறுவிதமான அனுபவங்கள் பெறப்பட்டன. அவைகளை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இது எழுதப்படுகிறது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதனை தொடர்ந்து நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் பல்வேறுவிதமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதன் பிரகாரம் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து மீளக்குடியேறிய கிராமங்களில் பாதுகாப்பான குடி நீர் மற்றும் சுகாதார வசதிகளை ( (WASH) வழங்க அரசாங்;கத்தினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.  அதற்காக சர்வதேச அபிவிருத்திற்கான அவுஸ்திரேலிய முகவரால் உலக வங்கி ஊடாக நிதி (அமெரிக்க டொலர் 2.01 மில்லியன்) வழங்கப்பட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மன்னார் மாவட்ட கிராமிய  நீர் வழங்கல் மற்றும் சுகாதார பிரிவினால் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் உலக வங்கியின் கொள்கை பிரமாணங்களின் அடிப்படையில் “நெர்ப்” (NEHRP) கிராமங்களை உள்ளடக்கிய ஐந்து உப செயற்திட்ட ((sub Project) கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு அங்கு சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பான குழாய் குடி நீர்; விநியோகம் என்பன வெற்றிகரமான முறையில் வழங்கப்பட்டன (திட்டக் காலம் - நவம்பர் 2011 தொடக்கம் ஜுன் 2014 வரை). பாதுகாப்பான குடி நீர் வழங்குவதாயின் அதற்கு முன்னர் அங்குள்ள நீர் வளத்தினையும் சூழலையும் பாதுகாக்க வேண்டியது மிக முக்கியமானதாகும். இதன் அடிப்படையிலேயே இத்திட்டம் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் முன்னெடுக்கப்படட்டது.

திட்டத்தின் நோக்கம்

இத்திட்ட கிராமங்களிலுள்ள பயனாளிகளின் சுகாதார நலவாழ்வினை முன்னேற்றுவதாகும்.

ஆய்வு முறையியல்
தொடர்புபட்ட ஆவணங்கள்இபாடசாலை அபிவிருத்தி சங்கங்களுடனான கலந்துறையாடலகள்;இ பேட்டி கானல்இ தொடர்ச்சியான களத்தரிசிப்பு மற்றும் அவதானம் போன்றவைகள் ஊடாக இந்த ஆய்வுக்கான தகவல்கள் பெறப்பட்டன.

திட்ட அறிமுகம் (பொது நிறுவனங்களுக்கு சுகாதார மலசல வசதி வழங்குதல்)


NEP WASH திட்டத்தின் பிரதான நோக்கம் பாதுகாப்பான மற்றும் தொடர்ச்சியான குடி நீரினை தெரிவு செய்யப்பட்ட கிராமங்களிலுள்ள மக்களுக்கு வழங்குவதாகும். அதற்காக அங்குள்ள நீர் வளத்தினை பாதுகாக்க வேண்டிய தலையாகிய பொறுப்பும் இங்கு காணப்படுகின்றது. அதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட உப செயற்திட்ட கிராமங்களிலுள்ள மலசலகூட வசதி தேவையுடைய பொது மக்கள் மற்றும் பொது நிறுவனங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவைகளுக்கு இந்த வசதிகள் வழங்கப்பட்டன. இங்கு பொது நிறுவனங்கள் தொடர்பாக நோக்கப்படுவதனால் கீழ்வரும் பொது நிறுவனங்களில் மிக முக்கியமான ஒன்றுக்கு இத்திட்டத்தின் சுகாதார மலசலகூட வசதி வழங்கப்படும் என இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவை

அரச பாடசாலைகள்
வணக்கஸ்தலங்கள்
பொதுச்சந்தை
பொழுதுபோக்கு ஸ்தலங்கள்
பொது நிறுவனங்கள்

NEP WASH திட்டத்தில் பொது நிறுவனத்திற்கான மலசலகூடம் அமைப்பதில் காணப்பட்டவிதி முறைகள்


தரவுகள் சேகரிக்கப்பட்டு அதன் பகுப்பாயின்படியும் உலக வங்கியின் கொள்கைத்திட்டத்தின் பிரகாரமும் மேலுள்ள நிறுவனங்களில் ஒன்று தெரிவு செய்யப்படும்.

தெரிவு செய்யப்படும் நிறுவனத்தின் தேவைக்கேற்ப மலசலகூட வசதிகள் வழங்கப்படும்.
கிராமிய நீர் வழங்கல் மற்றும் சுகாதார பிரிவுடன் குறிப்பிட்ட நிறுவனம் ஒப்பந்தமென்றில் கைச்சாத்திடல் வேண்டும்.
மலசலகூடத்தினை அமைப்பதற்கு தேவைப்படும் மொத்த நிதியில் 10மூ பங்களிப்பினை குறித்த நிறுவனம் வழங்க வேண்டும். அது நிதி அல்லது உழைப்பு சார்ந்ததாக இருக்கலாம்

திட்ட முன்மொழிவினை மாவட்ட கிராமிய நீர் வழங்கல் மற்றும் சுகாதார பிரிவின் உதவியுடன் குறிப்பிட்ட நிறுவனம் தயாரிப்பதுடன் அதனை உரிய நிறுவனத்தின் தலைவர் மற்றும் குறிப்பிட்ட பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோர் சிபாரிசு செய்யதல் வேண்டும். ஆத்துடன் இந்த முன்மொழிவினை NநுP றுயுளுர் திட்ட முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்புவதுடன் அதனால் ஏற்றுக்கொள்ளப்பவும் வேண்டும்.    
கட்டுமாண நடவடிக்கைள் மூன்று கட்டங்களை கொண்டதாகும்.

நிதி மூன்று கட்டங்களாக வழங்கப்படும் அதாவது ஒவ்வொரு கட்டமும் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே அதற்கான நிதி உரிய நிறுவனத்திற்கு வழங்கப்படும் (இதனை சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் உறுதிப்படுத்த வேண்டும்)

நிதி குறிப்பிட்ட நிறுவனத்தின்  வங்கி கணக்கில் இடப்படும்.
இத்திட்டம் குறிப்பி;ட்ட காலவரையறையைக் கொண்டதாகும்.
சேகரிக்கப்பட்ட தரவுகள்இ நேர் கானல்இ அவதானிப்புக்கள் மற்றும் உப செயற்திட்ட கிராமங்களின் சமூக பொருளாதார பௌதீக வளம் போன்றவைகளை கவனற்திற் கொண்டு அதிக சுகாதார மலசலகூட வசதி தேவைப்படும் ஒரு நிறுவனமாகஅரச பாடசாலைகள் இனம் காணப்பட்டன. அதன் பிரகாரம்; ஒவ்வெரு உப செயற்திட்ட கிராமத்திலிருந்தும் ஒரு அரச பாடசாலை இத்திட்டத்திற்காக தெரிவுசெய்யப்பட்டது. அவைகளின் விபரம் கீழேதரப்படுகின்றன.
மன்னார் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகள்


இத்திட்டத்தினை நடைமறைப்படுத்துவதற்காக ஐந்து உப செயற்திட்ட கிராமங்களிலிருந்து ஐந்து அரச பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டிருந்ததனால் அவைகளின் பாடசாலை அபிவிருத்தி சங்கங்களே இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக முன்வந்திருந்தன.
இத்திட்டத்தினால் பெறப்படட்ட அனுபவங்கள்
மலசலகூடத்தினை அமைப்பதென்றால் அதற்கான விதிமுறைகள் உள்ளன அதனை சரியாக அனுகுவதனுடாகவே அதை வெற்றிகரமாக அமைக்க முடியும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.அதாவது இடத்தெரிவினை மேற்கொள்ள குறிப்பிட்ட பிரதேச சபையினதும் சுகாதார பிரிவினதும் அனுமதியினை முன்கூட்டியே பெற்றிருத்தல் வேண்டும் (உதாரணமாகBuilding Application, PHI reccommontation…)..அதனை மேற்கொள்ள குறிப்பிட்ட பணமும் காலமும் தேவைப்படும். அதனை உணர்ந்த நாம் இதில் சம்மந்தப்ட்ட தரப்புக்கள் அனைவரையும் ஒன்றுகூட்டி அவர்களின் ஒத்துழைப்புடன் பணமும் காலமும் விரையமின்றி மேலேயுள்ள பணிகளை ஐந்து உபசெயற்திட்டத்திற்கும் ஒர் இரு தினங்களில் முன்னெடுத்திருந்தோம். இது சம்மந்தப்பட்ட அனைவருக்கும்புதியதோர் அனுபவத்தினை வழங்கியிருந்தது.
இதன் கட்டுமாண பணிகளை ஒப்பந்தக்காரர் ஊடாக அல்லது குறிப்பிட்ட பாடசாலையின் அபிவிருத்தி சங்கங்கத்தினுடாகவோ முன்னெடுக்கப்படலாம் என்ற அம்சமும் இதில் காணப்பட்டது. ஆனால் பாடசாலை அபிவிருத்தி சங்கமே இந்த ஒப்பந்தத்தினை மேற்கொண்டது.
தற்போதைய மாணவர்களின் அல்லது ஆசிரியர்களது எண்ணிக்ககைக்கு ஏற்ப மலசலகூடங்கள் அமைக்கப்படாமல் ஏதிர் கால மாணவர்களின் தேவையினையும் கருத்திற் கொண்டு அமைக்கப்பட்டன. ஏனெனின் இப்பாடசாலைகள் மீள்குடியேற்ற கிராமங்களை உள்ளடக்கியுள்ளதனால் மாணவர்களின் எண்ணிக்ககை குறுகிய காலத்திற்குள் சடுதியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு ஈடுகொடுக்கக் கூடியவகையில் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
திட்ட விதிமுறைப்படி ஒவ்வெரு கட்டத்திற்குமான வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னரே அதற்கான நிதி உரிய பாடசாலை அபிவிருத்தி சங்கங்கத்திற்கு வழங்கப்படும. ஆனால் சில பாடசாலை அபிவிருத்தி சங்கங்களிடம் போதுமானநிதி கையிருப்பில் இல்லாத காரணத்தினால் (அண்மையில் மீள் குடியேறிய கிராமங்களாகும்) கட்டுமாண வேலைகளை முன்னெடுப்பதில் தாமதம் காணப்பட்டது. இதனை உணர்ந்த நாம் ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் முன்கூட்டியே அதற்கான நிதியினை வழங்கியிருந்தோம்.இதன் காரணமாக கட்டுமாண பணிகள் துரிதப்படுத்தப்படடிருந்தன.
இத்திட்டத்திற்கான மொத்த செலவில் 10மூ பங்களிப்பினை பாடசாலை அபிவிருத்தி சங்கம் செலுத்த வேண்டும் அது நிதி அல்லது உழைப்பு ரீதியாகவோ இருக்கலாம். இதில் பெரும்பாலும் உழைப்பு ரீதியான பங்களிப்பினை வழங்கியிருந்தன (குழிவெட்டுதல்unskilled works.. இதனை பெற்றோர் சம்பளமின்றி வழங்கியிருந்தனர்). சில பாடசாலை அபிவிருத்தி சங்கங்களுக்கு இந்த பங்களிப்பானது நிதி ரீதியான சேமிப்பினை பெற வாய்ப்பாக மாறியிருந்தது.
இத்திட்டத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அவைகளிகன் சமூக கலாசார சூழலுக்கேற்ப மலசலகூட வசதிகள் வழங்கப்பட்டன. உதாரணமாகமுஸ்லிம் பாடசாலைகளில் ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கென வௌ;வேறான மலசலகூட வசதிகள் வழங்கப்பட்டன.
வலுவான பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள் ((School Development Society)உருவாக இத்திட்டம் அடிப்படையாக இருந்தது. ஏனெனின் இத்திட்ட பணிகளை குறிப்பிட்ட பாடசாலையின் அபிவிருத்தி சங்கங்கமே முன்னெடுத்திருந்தன. இதனால் இச்சங்கத்திற்கு கூட்டாக தீர்மான் எடுத்தல்இ திட்டமிடல்இ புரிந்தணர்வுடன் செயற்படல்இ வெளிப்படைத் தன்மை மற்றும் நிதி முகாமைத்துவம் போன்ற இன்னோறன்ன விடயங்களில் சிறந்த அனுபவம் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன் ஏதிர் காலத்தில் இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை சுயமாக நடைமுறைப்படுத்த நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள் வெற்றிகரமாக  முன்னெடுக்கப்பட்டதோடு வேலையின் தரமும் சிறப்பாக இருந்தது.ஏனெனில் இத்திட்ட பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
முடியுரைஃஆலோசனை
எந்த திட்டம் திட்டத்திற்குரிய பயனாளிகளின் பங்கேற்புடன் வடிவமைக்கப்பட்டு செயற்படுத்தப்படுகிறதோ அது நீடித்த நிலைத்த தன்மையினை கொண்டிருக்கும். அந்தவகையில் பாடசாலை அபிவிருத்தி சங்கம் ((School Development Society,  கிராமங்களை சேர்ந்த பாடசாலைகளிலுள்ள சங்கங்களாகும்) இத்திட்டத்தில் நேரடியாக சம்மந்தப்பட்டதோடு அவர்களே கட்டுமான வேலைக்கான ஒப்பந்தத்தினை மேற்கொண்டு அதனை திருப்திகரமான முறையில் உரிய காலவேளையில் பூர்த்தி செய்திருந்தனர். இதனால் அவர்கள் பலவிதமான புதிய அனுபவங்களையும் பெற்;றுள்ளனர். ஏதிர் காலத்தில் இவ்வாறான அபிவிருத்தி பணிகள் அமுல்படுத்தப்படும் போது அதனை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினுடாக (ளுனுளு) இந்த பிராந்தியத்தில் மாத்திரம் அல்லாமல் எனைய பிரதேசங்களிலும் மேற்கொள்ளு போது அது தொடர்புபட்ட அனைத்து தரப்புகளுக்கும் பல வழிகளிலும் சாதகமான விளைவுகளை தரும் என்பது வெளிப்படையானதாகும்.

இத்திட்டத்தின் மூலம் பூர்த்திசெய்யப்பட்ட பாடசாலை ஒன்றின் சுகாதாரமான மலசலகூடம.;



மன்னார் பாடசாலைகளில் சுகாதார மலசலகூட வசதிகள் நடைமுறைப்படத்தப்பட்ட போது ஏற்பட்ட அனுபவங்கள்- ஓர் ஆய்வு M.S.M. Sarook Reviewed by NEWMANNAR on August 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.