மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் கரையில் தலையற்ற நிலையில் சடலம் மீட்பு-Photos
மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் மிகவும் உருக்குழைந்த நிலையில் நேற்று(4) செவ்வாய்க்கிழமை இரவு சடலம் ஒன்றை மன்னார் பொலிஸார் மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
தாழ்வுபாட்டு கடற்கரையில் தலை அற்ற நிலையில் மிகவும் சிதைவடைந்து உருக்குழைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியதை கண்ட அப்பகுதி மீனவர்கள் உடனடியாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தாழ்வுபாட்டு கடற்கரைக்குச் சென்ற மன்னார் பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சடலம் தலை இன்றி காணப்பட்டதோடு கை,கால் மற்றும் உடற்பகுதிகள் மிகவும் சிதைவடைந்த நிலையில் உள்ளது.குறித்த சடலம் ஆண்,பெண் என்பது கூட அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது.
குறித்த சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் கரையில் தலையற்ற நிலையில் சடலம் மீட்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
August 05, 2015
Rating:
No comments:
Post a Comment