அண்மைய செய்திகள்

recent
-

யாழ்.மாவட்டத்தில் கடந்த 75 தினங்களில் வீதி விபத்துக்களில் 48 பேர் மரணம்...


யாழ். மாவட்­டத்தில் வீதி விபத்­துக்­க­ளினால் 75 தினங்­களில் 48 பேர் மர­ண­ம­டைந்­துள்­ள­துடன் 4ஆயி­ரத்து 850 பேருக்கு எலும்பு முறிவும் 700 பேருக்கு தலையில் பாதிப்பும் ஏற்பட்டுள்­ள­தாக தெரி­விக்­கப்­படு­கின்­றது.

யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையின் புள்ளி விப­ரங்­களின் பிர­காரம் கடந்த ஜூன் மாதம் 10ஆம் திக­தியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் ஏற்­பட்ட விப­த்­துக்கள் தொடர்­பான பாதிப்பு விபரம் வெளிவந்­துள்­ளது.

குறித்த காலப்­ப­கு­தியில் வாகன விபத்­துக்­குள்­ளாகி 6 ஆயி­ரத்து 300 பேர் போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். இதில் அனைத்து வயதுப் பிரிவு நிலை­யிலும் உள்ள 4 ஆயி­ரத்து 850 பேர் எலும்பு முறி­வுக்கு உள்­ளா­கிய நிலையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

அவ­சர சிகிச்சைப் பிரிவில் மாத்­திரம் குறித்த 75 நாள் காலப் பகு­தியில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­வர்­களில் 48 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

யாழ்.மாவட்­டத்தின் வீதிகள் திருத்தி அமைக்­கப்­பட்டு காபெட் வீதி­க­ளாக மறு­சீ­ர­மைப்பு செய்­யப்­பட்­டி­ருப்­பதும் வாக­னங்­களின் தொகை அண்மைக் காலத்தில் அதி­க­ரித்­தி­ருப்­ப­தோடு வாகனச் சார­தி­கள்­வே­க­மாக வாக­னங்­களைச் செலுத்­து­வ­துமே விபத்­துக்­க­ளுக்கு காரணம் எனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

யாழ்.மாவட்ட வீதி­களில் வீதிப் போக்­கு­வ­ரத்தைக் கண்­கா­ணித்து வரும் பொலிஸார் வாகனப் போக்­கு­வ­ரத்து தொடர்­பான ஆவ­ணங்­களைப் பரி­சீ­லித்து சட்ட நட­வ­டிக்­கைக்கு உள்­ளாக்­கு­கின்­றனர்.

ஆனால் வேகத்தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களோ அதி­க­ரித்த வேகத்தில் வாக­னங்­களைச் செலுத்­துவோர் மீது சட்ட நட­வ­டிக்­கையோ மேற்கொள்ளுவது இல்லை.வாகனம் செலுத்தும் வேகத்தைக் கட்டுப் படுத்தும் வரையில் விபத்துக்களைக் கட்டுப்படுத்த முடியாது என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


யாழ்.மாவட்டத்தில் கடந்த 75 தினங்களில் வீதி விபத்துக்களில் 48 பேர் மரணம்... Reviewed by Author on September 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.