மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பின் உடல் நிலை முன்னேறுகிறது!
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக சிங்கப்பூர் மருத்துவமனையில் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கும் ஆலோசனை மருத்துவர் டாக்டர் பெண்டன் ஜியாப் கூறுகிறார்.
சிங்கப்பூரிலிருந்து பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில், டாக்டர் ஜியாப், "ஆயரின் உடல் நிலை இப்போது நன்றாக இருக்கிறது.
அவரது வலது கையிலும் வலது காலிலும் இன்னும் கொஞ்சம் தசைப் பிடிப்பு இருக்கிறது.
அவருக்கு தரப்படும் பிசியோதெரப்பிக்கு ( அதாவது இயன்முறை சிகிச்சை) அவர் நல்லமுறையில் ஒத்துழைத்து பயிற்சி பெற்று வருகிறார்.
நடை பழகும் கருவியை வைத்துக்கொண்டு நடக்கிறார்.
உடையணிவது போன்ற அன்றாட வேலைகளைச் செய்ய அவருக்கு இன்னும் உதவி தேவைப்படுகிறது.
அவருக்கு வந்த ஸ்ட்ரோக்கை வைத்துப் பார்க்கும் போது, இது ஒன்றும் அசாதாரணமானதல்ல" , என்றார்.
சிகிச்சை இன்னும் ஆறு மாதம் முதல் ஒன்பது மாதங்கள் வரை தொடரக்கூடும் என்று கூறிய டாக்டர் ஜியாப், ஆனால் அவர் இலங்கைக்கு இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் திரும்ப முடியும் என்று கருதுவதாகக் கூறினார்.

Reviewed by NEWMANNAR
on
September 25, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 25, 2015
Rating:

No comments:
Post a Comment