தீக்காய தழும்பால் நரக வேதனை அனுபவித்த பெண்கள்: டாட்டூ முறையால் மறைத்து அழகூட்டும் இளம்பெண்...
தீ மற்றும் விபத்து காயங்களால், முகத்தையும் உடலையும் விகாரமாக மாற்றும் தழும்புகளை, அதன் மீது தோல் நிறத்திலே பச்சைகுத்தி (Tattoo), ஒரு குறையாக தெரிந்ததை மறைத்து சரிபடுத்தி விடுகிறார் இந்த கலைநிபுணர்.
தீ தழும்புகளோடு தன்னையே தான் வெறுத்தபடி இருந்த கனடா இளம்பெண் சமீரா உமர்(17) என்பவர் பாஸ்மா ஹமீதினின் டாட்டூ கலைதிறனை அறிந்து, அவரை அணுகி தனது பிரச்சனையை கூறியுள்ளார்.
பாஸ்மாவும் தனக்கும் இளமையில் இதுபோல, ஒரு சம்பவம் தன்னாலேயே ஏற்பட்டதை நினைவுகூர்ந்தாள். அந்த தீக்காய அனுபவம்தான் தழும்பை மறைக்கும் டாட்டூ கலையை புதிய சிந்தனையில் அர்த்தமுள்ளதாக்கும் ஆர்வத்தை எனக்குள் வளர்த்தது என்றும் பெருமிதப் பட்டுக்கொண்டாள்.
மேலும், சமீராவுக்கு இலவசமாகவே பச்சைகுத்தி, விகாராத்தை போக்கும் சிகிச்சையை ஒரு சிறு மின்சார கருவி மூலமாக அளித்தார்.
சமீராவின் நிறத்துக்கு பொருத்தமான, நிரந்தரமான நிறமி நுண்பவுடரையே(Micro Pigment) பயன்படுத்தி கனகச்சிதமாக திருப்தி செய்திருந்தாள்.
தான் இழந்த அழகை மீட்டுத்தந்த தேவதையாகவே, உணர்ச்சிப் பெருக்கால் பாஸ்மாவின் கைகளை அணைத்து முத்தமிட்டு சமீரா தனது நன்றியை வெளிப்படுத்தினாள்.
இதுபோல பல பேருக்கு செய்துள்ளார். இவர், மருத்துவத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறமி நுண்பவுடரையே பயன்படுத்துகிறார்.
பாஸ்மா தனக்கே முகத்தில் நிறமி டாட்டூ செய்துகொண்டிருப்பது நல்ல முன்னுதாரணம்.
தங்கள் முகத்தின் பழைய அழகைப் பார்ப்பவர்கள், நரகத்திற்கு சென்று மீண்டு வந்ததாகவே கூறுகின்றனர். பாஸ்மாவின் டாட்டூ வேலையின் செய்நேர்த்தியே இந்த திருப்திக்கு காரணம்.
இதை லட்சியமாக தொடர்ந்து, பலருடைய கவலையை மாற்றப் போவதாகவும் அதுவே தனக்கு கிடைத்திருக்கும் நல்ல தொழிலாகவும் பாஸ்மா ஹமீத் C.B.C. செய்திக்கான பேட்டியிலும் கூறியுள்ளார்.
பெரும்பாலான நாடுகளில் நகரம், குக்கிராமம் இரண்டிலுமே வெவ்வேறு புரிதல்களில், உடம்பில் டாட்டூ வரையும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருந்துவந்துள்ளது.
ஆனாலும், இதை விரும்பாதவர்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். நல்ல பக்குவப்பட்டவர்கள் பச்சை குத்திக்கொள்வதை தேவையில்லாத ஒரு விடயமாக நினைப்பதோடு, இயற்கையான, பொருத்தமான அழகாகவும் கருதுகின்றனர்.
அதனால், இந்த டாட்டூ போட்டுக்கொள்பவர்கள் மீது ஒரு தாழ்வான பார்வைதான் சமுதாயத்தில் இருந்து வந்தது.
அதேவேளையில், தீ மற்றும் வேறு விதமான விபத்துக்களால் தப்பி பிழைத்தவர்கள். தங்கள் முகத்தில் விழுந்த விகாரமான தழும்புகளை பார்க்கும் போது, அதை ஜீரணிக்கவும் முடியாமல், போக்கவும் வழிதெரியாமல் ஏன் பிழைத்தோம் என்ற விரக்தியில் வாழ்ந்தனர்.
அப்படிப்பட்டவர்களுக்கு, ஒரு நல்ல தீர்வாக அமைந்துள்ளது. பாஸ்மாவின் இந்த புதிய முயற்சி.
அதனால் இது எல்லோருடைய வரவேற்பையும் பெற்றுள்ளது. சமுதாயத்தில் ஒரு அவசியமான இடத்துக்கு டாட்டூ வந்துள்ளது.
வெற்று ஆடம்பரமாக மட்டுமே இருந்த டாட்டூ, இந்த புதிய பரிணாமத்தினால் தோல் பிரச்சனைக்கும் திருப்தியான பரிகாரமாகியிருக்கிறது.
தீக்காய தழும்பால் நரக வேதனை அனுபவித்த பெண்கள்: டாட்டூ முறையால் மறைத்து அழகூட்டும் இளம்பெண்...
Reviewed by Author
on
September 24, 2015
Rating:
Reviewed by Author
on
September 24, 2015
Rating:




No comments:
Post a Comment