சரத் பொன்சேகாவிற்கு தண்டனை வழங்குமா அரசு?...-சிவகரன்
சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்சல் பதவியை வழங்கிய அரசு, அவரை விசாரித்து நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை வழங்குமா என தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ். சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐ.நா அறிக்கை தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன அழிப்பு செய்யப்பட்ட தமிழ் மக்களினுடைய எதிர்பார்ப்பையும் மீறி ஐ.நா மன்றத்தினுடைய அறிக்கை முன்வைக்கபட்டிருந்தாலும், அதற்கு மாறாக எதிர்வரும் 24ம் திகதி அமெரிக்க அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் பேரணையிலும்கூட,
இன அழிப்பு செய்யபட்டதிற்கு சர்வதேச விசாரணை அல்லாமல் கலப்பு நீதிமன்றத்தின் ஊடாக உள்ளக விசாரணை செய்ய முன்மொழியப்பட்டுள்ளமை மிகுந்த வேதனையுடையதாகவே எங்களால் பார்க்ககூடியதாக இருக்கிறது.
முள்ளிவாய்க்காலிலே நடைபெற்றது ஒரு மனித பேரவலத்தினுடைய பெரிய இன அழிப்பு ஒரு லட்சத்தி 46 ஆயிரத்தி 679 பேர் கொலை செய்யபட்டார்கள் அல்லது காணமல் ஆக்கபட்டார்கள்.
ஆகவே சர்வதேச நியதிகளுக்கு உட்பட்ட நீதி விசாரணையை பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு உண்மையையும் நியாயத்தையும் பெற்றுகொள்ளும் ஒரு வாய்ப்பாக இது அமைய வேண்டும்.
ஆனால் அந்த சூழல் இல்லாமல் ஐ.நா மன்றத்தினுடைய அறிக்கையிலும் கூட வெள்ளைகொடி விவகாரம் அல்லது ஒப்படைக்கபட்டவர்களினுடைய விவகாரம், தமிழ் மக்களினுடைய இன பிரச்சினைக்குரிய விடயங்கள் என்பன போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் காணாமல்போயிருந்தாலும்,
ஓரளவிற்கேனும் வரவேற்கதக்க சூழ்நிலை இருந்தாலும் இதற்கு மாறாக அமெரிக்க அரசாங்கத்தினுடைய பேரணை மிக மோசமான பின்னடைவை தரவிருக்கிறது.
ஏனெனில், 13வது சரத்துகளின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்தழிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருக்கின்ற விடயம் உண்மையில் மிக மோசமான முன்னுதாரணமாகவே பார்க்ககூடியதான ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது.
ஆனால் அந்த நிலைகள் எல்லாம் எவ்வாறு போகப்போகின்றது என்று தெரியவில்லை.
தெற்கிலே இருக்கின்ற எதிர்க்கட்சிகளும் சரி, ஆளும் கட்சியினுடைய பிரதான அமைச்சர்களும் சரி, உள்ளக பொறிமுறையில் இருக்கின்ற கலப்பு பொறிமுறைக்குகூட மாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்ற இந்த சூழ்நிலையில் எங்களுக்கு முள்ளிவாய்காலிலே குற்றமனதோடு உணவுகள் தடுக்கப்பட்டன,
மருந்துகள் எங்களுக்க கிடைக்கவில்லை, பாதுகாப்பு வலயம் என்று சொல்லபட்ட இடங்களில் தாக்குதல்கள் இடம் பெற்றன.
திட்டமிட்டு எண்ணிக்கை குறைப்படிப்பு செய்யப்பட்டன. ஆகவே மெஸ்ரியா என சொல்லபடுகின்ற குற்றமனத்தின் ஊடாக குற்றங்கள் நடைபெற்றது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.
ஆகவே இந்த உள்ளக விசாரணையில் எங்களுக்கு எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை.
மூதூரிலே நடைபெற்ற அக்சன் பாம் படுகொலையினுடைய விசாரணையை நாங்கள் கண்டோம்,
திருகோணமமலையில் மாணவர் படுகொலையை நாங்கள் பார்த்தோம். கடந்த காலங்களிலே கிருசாந்தி குமாரசாமி வழக்கு உட்பட பல்வேறுபட்ட வழக்குகளையும் நாங்கள் பார்த்தவர்கள்.
உள்ளக விசாரணையிலே நாங்கள் எவ்வளவு நம்பிக்கை கொள்ளமுடியும் என்ற நிலைபாட்டில் எப்போதுமே நம்பிக்கை அற்றவர்களாக இருக்கின்றோம்.
ஏனெனில் மாறாக உள்ளுர் விசாரணையிலே சாட்சியாளர்கள் சுதந்திரமாக சாட்சிகளை வழங்க முடியாத நிலையிருக்கும். அவ்வாறு சாட்சிகளை வழங்கினாலும் அவர்களை பாதுகாக்ககூடியவர் யார்? என்கின்ற கேள்வி இருக்கும்.
அந்த சாட்சிகளுக்கூடாக ஜனாதிபதிக்கு பரிந்துரைக்க கூடிய விடயங்களை அமுல்படுத்தி விசாரிக்கபட போகின்ற பொலிஸ்காரர்களும், புலனாய்வாளர்களும், இலங்கையை சார்த்ந்தவர்கள், உள்நாட்டை சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் குற்றவாளிகளை விசாரிக்க முடியுமா?
குற்றவாளியை குற்றவாளியே விசாரிக்கின்ற நிலைப்பாடாக அது மாறிவிடக்கூடிய சூழ்நிலையிருக்கும். அவ்வாறு அவர்கள் விசாரிக்கின்ற பொறிமுறையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது இலங்கையில் உள்ள நீதித்துறை எப்படி அவர்களுக்கு நீதியினை வழங்க முடியும்.
சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்சல் பதவியை வழங்கி சகலவிதமான சலுகையையும் கொடுத்த அவர்கள் அவரை அழைத்து விசாரித்து அவருக்கு அந்த நீதிமன்றம் தண்டனை கொடுக்குமா? அல்லது கோத்தபாய ராஜபக்சவிற்கு தண்டனை கொடுக்குமா?
சவேந்திர டி சில்வாவிற்கு தண்டனை கொடுக்குமா? அல்லது கமால் குணரெட்ணவிற்கு தண்டனை கொடுக்குமா? என்கின்ற கேள்வியை நாங்கள் கேட்க கூடியவர்களாகவே இருக்கிறோம்.
ஆகவே கொடுக்கபட்டிருக்கின்ற இரண்டு வருட காலத்திற்குள் இலங்கையில் எந்த ஒரு மாற்றமும் நடைபெறகூடய சூழ்நிலையும் நிகழாது. இந்த உள்ளக விசாரணையானது முழு சர்வதேச சமூகத்தை ஏமாற்றுகின்ற நிலைப்பாடாகவே இருக்கும்.
எந்த தமிழ் மகனும், பாதிக்கப்பட்டவனும், இன அழிப்பு செய்யபட்டவனும் இந்த சர்வதேச விசாரணை ஒன்றே தேவை உள்ளக விசாரணை தேவையில்லை என்றும்,
இந்த இலங்கை நீதிமன்றத்திலே நீதி மன்ற கட்டமைப்புகளிலோ அல்லது அரச பொறிமுறைகளிலோ எந்தவிதமாக நம்பிக்கையும் இல்லை என்பதினை தெட்டத்தெழிவாக பல காலமாகவே நாம் உணர்த்தி வருகின்றோம்.
ஆகவே இந்த முறைமையை முற்றாக நிராகரிக்க கூடிய சூழ்நிலையில் இது எங்களுக்கு இறுதியாக கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பமாகவே நாங்கள் கருதவேண்டி இருக்கிறது.
எம்மவர் இந்த விடயத்திலே அக்கறையோடும் சிரத்தையோடும் பங்காற்றவேண்டிய தேவை இருக்கிறது. என் எனில் கொலைசெய்யபட்டவர்கள், காணாமல் ஆக்கபட்டவர்கள், ஒப்படைத்து காணாமல் ஆக்கபட்டவர்களுக்கு நீதியும் நியாயமும் கிடைத்து,
தமிழ் மக்களுக்கு சுதந்திரமான நிம்மதியான வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்திலே அதாவது தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை என்கின்ற கோட்பாட்டு அடிப்படையிலே எங்கள் இன பிரச்சினை தீர்க்கபட வேண்டிய வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுகொள்வதோடு,
மாறாக அமெரிக்காவால் பரிந்துரைக்கபட்ட 13வது சரத்து என்பது எந்த சந்தர்ப்பத்திலும் எங்களுக்கு பொருத்தமில்லை, ஆகவே உள்ளக விசாரணையும் அவ்வாறுதான் முடியும்.
கே.பி என்கின்ற குமரன் பத்மநாதன் என்பவரை கைது செய்வதற்கு ஆதாரமில்லை என்று சொல்கின்ற சட்டமா அதிபர் திணைக்களம் இந்த இராணுவத்தையும் அல்லது ஏற்கனவே போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களையும் தண்டிக்கடிய சூழ்நிலை நிலவும் என்பதினை நாங்கள் முன்னுதாரணமாக கருதவேண்டியவர்களாகவே இருக்கின்றோம் என்றார்.
சரத் பொன்சேகாவிற்கு தண்டனை வழங்குமா அரசு?...-சிவகரன்
Reviewed by Author
on
September 23, 2015
Rating:
Reviewed by Author
on
September 23, 2015
Rating:


No comments:
Post a Comment